திருத்துறைப்பூண்டி நகர கழக துணைச் செயலாளர் களப்பாள் சம்பத்குமாரின் தாயார் ப.சுசிலாதேவி (வயது 79) இன்று (23.06.2024) காலை 11 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நகர கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்து மறைந்த அம்மையார் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செய்யப்பட்டது. இறுதி ஊர்வலம் நாளை (24.6.2024) காலை 10 மணி அளவில் களப்பாளில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்படும்.