கொல்கத்தா, ஜூன் 22- தற்போது நடைமுறையில் இருக்கும் குற்றவியல் சட்டங்கள்,காலனிய காலத்தில் கொண்டு வரப்பட்டவை என்று கூறி, ஒன்றிய அரசு கடந்த ஆண்டு 3 புதிய குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இந்தச் சட்டங்கள் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல் படுத்தப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு இச்சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், தற்போது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா இச்சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவர், “நாடா ளுமன்றத்தில் 146 நாடா ளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய் யப்பட்டிருந்த ஜன நாயகத்தின் இருண்ட கால கட்டத்தில் இந்த 3 புதிய குற்றவி யல் சட்டங்கள் நிறை வேற்றப்பட்டன. எனவே, இந்த சட்டங்களை நிறுத்திவைக்க வேண்டும். இந்த சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
3 குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் – பிரதமருக்கு மம்தா கடிதம்
Leave a Comment