கொல்கத்தா, ஜூன் 21 மேற்கு வங்க ஆளுநா் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மாநில காவல்துறையினரால் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் நேற்று (20.6.2024) குற்றஞ்சாட்டினார்.ஆளுநா் மாளிகையில் இருந்து அனைத்து மாநில காவலா்களும் வெளியேறுமாறு ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் 17.6.2024 அன்று உத்தரவிட்டார். ஆனால், அவா்கள் வெளியேறாமல் பாதுகாப்புப் பணியை தொடா்கின்றனா். உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காவல்துறையின் செயல்பாடுகள், முதலமைச்சர் மற்றும் உள்துறை பொறுப்பையும் வகிக்கும் மம்தாவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்றார்.