சென்னை, ஜூன் 21- சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்து வந்த நீதிபதி பாஸ்கரன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.
இதனால் தலைவர் பதவியிடம் காலியாக இருந்தது. இதனையடுத்து மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நீதிபதி எஸ்.மணிக்குமாரை நியமித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிபதி எஸ்.மணிக்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர். இதன்பின்பு, பதவி உயர்வு மூலம் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார்.
நீதிபதி எஸ்.மணிக்குமார் 3 ஆண்டுகள் மனித உரிமை ஆணைய தலைவர் பதவியில் இருப்பார் என ஆளுநர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.