நாகர்கோவில், ஜூன் 20- குமரிமாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார். மாவட்ட கழகக் காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலர் பெரியார் தாஸ், மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் எஸ்.அலெக்சாண்டர் ஆகியோர் உரையாற்றினர்.
தோழர்கள் தும்பவிளை மு.பால்மணி, நல்லூர் பெருமாள் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்
குற்றாலத்தில் ஜூலை 4 முதல் 7 வரை நடை பெறவுள்ள பெரியாரியல் பயிற்சி முகாமிற்கு குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக அதிகமான மாணவர்களை பங்கேற்க வைப்பது, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாக்கள், பரப்புரை கூட்டங்கள், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துவது, நீட்தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி பரப்புரை கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.