‘நீட்’ தேர்வை எதிர்த்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் நாளை போராட்டம்

2 Min Read

புதுடில்லி, ஜூன் 20 நீட் தேர்வு சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள சூழ்நிலையில் ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) கண்டித்தும், மாணவர்களுக்கு நீதி கோரியும் நாடு முழுவதும் நாளை (21.6.2024) போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், பொறுப்பாளர்கள், அனைத்து பிரிவு தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ள தாவது:
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை ஜூன் 4-இல்வெளியிட்டது. அதில், சில விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் உயர்த்தி காட்டப்பட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று நீட் வினாத்தாள் கசியவிடப்பட்டதால் தேர்வு முடிவுகளை நம்பியிருந்த லட்சக்க ணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது மாணவர்களிடையே மிகப்பெரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
பீகார், குஜராத், அரி யானாவில் நடத்தப்பட்ட விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டதிலிருந்து நீட் தேர்வில் திட்டமிட்டு முறை கேடு செய்யப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. இது, பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. உச்ச நீதிமன்றமும் இந்த குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை உணர்ந்து இத்தகை அலட்சியங்களை சகித்துக் கொள்ள முடியாது என்று கண்டித்துள்ளது. இத்தகைய முறைகேடுகள் தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மையை குலைப் பதுடன், எண்ணற்ற அர்ப்ப ணிப்பானமாணவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது.

இதற்காகத்தான், கடுமையான சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் இளைஞர்களை பாது காக்க காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது.
நீட் தேர்வில் நடை பெற்றுள்ள மாபெரும் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்தும், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் செயலற்ற தன்மை மற்றும்தொடர் மவுனத்துக்கு எதிர்ப்பு தெரிவித் தும், மாணவர்களுக்கு நீதி கோரியும் மாநில தலை மையகங்களில் நாளை (21.6.2024) மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டும். அதில், முக்கிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *