புதுடில்லி, ஜூன் 20- அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, சீனா, இங்கிலாந்து, இந் தியா, பாகிஸ்தான், இஸ் ரேல், வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன.
இதன் விவரங்கள் குறித்து சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி மய்யம் ஆய் வறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
ரஷ்யா தற்போது 4,380 அணு ஆயுதங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிடம் 3,708 அணு ஆயுதங்கள் உள்ளன. உலக நாடுக ளிடம் உள்ள அணு ஆயு தங்களில் 90 சதவீதம் இந்த இரு நாடுகளிடம் உள்ளன.
3ஆவதாக சீனாவிடம் 500 அணு ஆயுதங்கள் உள்ளன. உலகின் மற்ற நாடுகளை விட சீனா அணு ஆயுதங்களின் எண் ணிக்கையை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் அணு ஆயுதங்களைவிட 3 மடங்கு அதிக அணு ஆயுதங்களை சீனா வைத்துள்ளது.
சீனாவிடம் கடந் தாண்டு ஜனவரி மாத நிலவரப்படி 410 அணு ஆயுதங்கள்தான் இருந்தன. 2030ஆம் ஆண்டுக்குள் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 1,000-மாக உயர்ந்த சீனா திட்ட மிட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் கடந்தாண்டு தெரிவித்திருந்தது.
4ஆவது இடத்தில் உள்ள பிரான்ஸ் 290 அணு ஆயுதங்களையும், 5ஆவது இடத்தில் உள்ள இங்கிலாந்து 225 அணு ஆயுதங்களையும் வைத் துள்ளன. 6ஆவது இடத்தில் உள்ள இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் உள்ளன.
இந்தியாவிடம் கடந்தாண்டு 164 அணு ஆயுதங்கள் இருந்தன.
இது தற்போது 172-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிடம் உள்ள அக்னி-5 ஏவுகணை 5,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் படைத்தவை.
இதில் அணு ஆயுதங் களை இணைத்து அனுப்ப முடியும் என்ப தால், இந்தியா தனது பாதுகாப்பில் உறுதியாக உள்ளது. நீர்மூழ்கி கப்பல் மூலம் அணு ஏவு கணைகளை வீசுவதை இந்தியா வலுப்படுத்த தொடங்கியுள்ளது. 7ஆவது இடத்தில் உள்ள பாகிஸ்தானிடம் தற்போது 170 அணு ஆயுதங்கள் உள்ளன.