மக்களவைத் தேர்தலில் 48 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு உத்தவ் தாக்கரே சிவசேனா முடிவு

2 Min Read

மும்பை, ஜூன் 20- வட மேற்கு மும்பை நாடாளுமன்ற தொகுதியில் 48 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற் றதை எதிர்த்து வழக்கு தொடர உத்தவ் தாக்கரே சிவசேனா முடிவு செய்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு

வடமேற்கு மும்பை தொகுதியில் சிவ சேனாவின் ரவீந்திரவாய்க்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் உத்தவ் பாலா சாகேப் தாக்கரே சிவசேனா வேட்பாளர் அமோல் கிருத்தி கரை தோற்கடித்தார்.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மய்யத்தில் அலைபேசி பயன்படுத்தியதாக ரவீந்திர வாய்க்கரின் உறவினர், தேர்தல் பணியாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதைத் தொடர்ந்து வட மேற்கு மும்பை வாக்கு எண் ணிக்கையில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவை சேர்ந்த மேனாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே 18.6.2024 அன்று மும்பையில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

வடமேற்கு மும்பை நாடாளுமன்ற தொகுதியில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா வின் ரவீந்திர வாய்க்கரிடம், எங்களது கட்சி வேட்பாளர் அமோல் கிருத்திகர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மோசடியின் மூலமாகவே எங்கள் கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார்.

மின்னணு எந்திரத்தை தவறாக பயன்படுத்தியதன் மூலம் எங்கள் வெற்றி தட்டி பறிக்கப்பட்டது.

வடமேற்கு மும்பை தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து எங்கள் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் சுதந் திரமாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் பா. ஜனதா 240 தொகுதிகளுக்கு பதிலாக 40 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும்.
-இவ்வாறு அவர் கூறினார்.

பதவி ஏற்க விடக்கூடாது

மற்றொரு மேனாள் அமைச் சர் அனில் பரப் கூறுகையில், “வாக்கு எண்ணிக்கையில் 19ஆவது சுற்று வரை எதிர் வேட்பாளரை விட 650 வாக் குகள் நாங்கள் அதிகம் பெற் றிருந்தோம்.

அதன் பின்னர் முடிவில் மாற்றம் ஏற்பட்டது. வடமேற்கு மும்பை தொகுதி யின் தேர்தல் அதிகாரிக்கு தொடர்ந்து வந்த தொலை பேசி அழைப்புகள் குறித்தும் விசாரணை தேவை” என்றார்.

கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், “ரவீந்திர வாய்க்கரின் தேர்தல் வெற்றி சந்தேகத்துக்கு இடமாக உள்ளது. இதுதொடர்பாக மும்பைவன்ராய் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவு தொடர்பாக பல சர்ச்சைகள் தொடரும் நிலையில், ரவீந்திர வாய்க்கரை மக்களவை உறுப்பினராக பதவி ஏற்க விடக்கூடாது.

விசாரணை முடியும் வரை அவர் மக்களவை உறுப்பினராக பதவி ஏற்பது தடுக்கப்பட்டால்தான், உண்மையான ஜனநாயகம் வெளிப்படும்” என்றார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *