பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் – பாடத்திட்டத்தில் இருட்டடிப்பு ஏன்? – தலைவர்கள் கண்டனம்

viduthalai
3 Min Read

புதுடில்லி, ஜூன் 19– பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம் செய்துள்ள என்.சி.இ.ஆர்.டி.யின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

பாபர் மசூதி இடிப்பு

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என். சி.இ.ஆர்.டி.) 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.

குறிப்பாக 12ஆம் வகுப்பு அரசியல் அறி வியல் பாடத்தில் இருந்து பாபர் மசூதி. இடிப்பு மற்றும் குஜராத் கலவரம் உள்ளிட்ட பாடங்களை மாற்றியமைத்து இருக்கிறது.

என்.சி.இ.ஆர்.டி.யின் இந்த நடவடிக்கை எதிர்க் கட்சிகளுக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது. கல்வியை காவி மயமாக்குவதாக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

காங்கிரஸ்

அந்த வகையில் காங் கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறி யிருப்பதாவது:-
என்.சி.இ.ஆர்.டி. ஒரு தொழில்முறை நிறுவனம் இல்லை. கடந்த 2014ஆம் ஆண்டு முதலே அது ஆர்.எஸ்.எஸ்.சின் அங்கமாக செயல்பட்டு வருகிறது.

என்.சி.இ.ஆர்.டி.யின் திருத்தப்பட்ட 11ஆம் வகுப்பு அரசியல் அறிவி யல் பாடப் புத்தகம் மதச்சார்பின்மையை விமர்சித்துள்ளது. இது அந்தக் கொள்கையை கொண்ட அரசியல் கட்சிகளையும் விமர் சிப்பது ஆகும்.
பாடப்புத்தகங்களை உற்பத்தி செய்வதுதான் என்.சி.இ.ஆர்.டி.யின் பணி. அரசியல் துண்டு பிரசுரங்கள் அல்லது பிரச்சாரம் செய்வது அல்ல.

இந்தியாவின் அடித்தளமாக மதச் சார்பின்மையை தனது முகவுரையில் வெளிப் படையாகக் குறிப்பிடும் நமது நாட்டின் அரச மைப்புச் சட்டத்தின் மீது என்.சி.இ.ஆர்.டி. தாக்குதல் நடத்தி வருகிறது.

அரசமைப்பின் அடிப் படை கட்டமைப்பில் மதச் சார்பின்மை இன்றிய மையாத அங்கம் என்று பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக கூறுகின்றன.

என்.சி.இ.ஆர்.டி. என்றால் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் என் பதை தனக்கே அது நினைவு படுத்திக்கொள்ள வேண் டும்.

மாறாக நாக்பூர் அல்லது நரேந்திரா கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அல்ல.
என்.சி.இ.ஆர்.டி.யின் அனைத்து பாடப் புத்தகங்களும் மிகவும் வேறுபட்ட சந்தேகத்துக் குரிய தரத்தில் உள்ளன.
– இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே கூறுகையில், ‘வெட்கமில்லா தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. தனக்கு சங்கடம் ஏற்படுத்தும் உண்மைகளை மாணவர்களிடம் இருந்து மறைக்கிறது.
பா.ஜனதாவும், மோடியும் குற்றவாளிகள், கலவரக்காரர்கள் என்ற வரலாற்றைக் கண்டு வெட்கப்படுகிறார்களா? மாணவர்களிடம் உண் மையை ஏன் மறைக்க வேண்டும்?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

இதைப்போல கேரள அமைச்சரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு தலை வர்களில் ஒருவருமான ராஜேஷ் கூறும்போது, ‘இது அனைத்து அமைப்பு களையும் மதச்சார்பு கொண்டவையாக மாற்றுவதற்கான நடவடிக் கையாகும்.

பா.ஜனதா தலைமை யிலான ஒன்றிய அரசு கடந்த 10 ஆண்டுகளாக இதுபோன்ற செயல்களைத் தான் செய்து வருகிறது.

ஒவ்வொருவருக்கும் இது ஒரு எச்சரிக்கை ஆகும். எனவே, சங் பரிவார் அமைப்புகளுக்கு எதிராக நாம் இணைந்து போராட வேண்டும்’ என தெரிவித்தார்.

அதேநேரம் எதிர்க் கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை என்.சி.இ.ஆர்.டி. நிராகரித்து உள்ளது. இது தொடர்பாக அதன் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி கூறிய தாவது:-

பள்ளி பாடத் திட்டங்கள் ஆண்டு தோறும் மறுஆய்வு செய்யப்படுகின்றன. குஜராத் கலவரம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவங்கள் மாணவர்களுக்கு மன அழுத்தம் மற் றும் வன்முறை மனப் பான்மையை ஏற்படுத்தக் கூடும்.

கலவரம் குறித்து எதற்கு பள்ளிப் பாடப் புத்தகங்களில் சேர்க்க வேண்டும்? நேர்மறையான குடிமக்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். வன்முறை மற்றும் மன அழுத்தத்துக்கு ஆளாகும் தனிநபர்களை அல்ல.

– இவ்வாறு அவர் கூறினார். மேலும் பள் ளிப் பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’, ‘பாரதம்’ என்ற 2 சொற்களும் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *