நீதி என்றால் பொது நீதி, பொது ஒழுக்கம், எப்படி? நீ உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும், மதிக்க வேண்டும் என்று கருதும் போது, அது போலவே நீ, மற்றவர்களை நடத்தி ஒழுக வேண்டாமா? நீ எப்படி உன் பொருளை மற்றவன் கவரக் கூடாது என்று கருதும் போது, நீ மற்றவர் பொருளைக் கவர வேண்டும் என்று எண்ணலாமா? நீ எப்படி உன் பெண்டு பிள்ளைகளை மற்றவன் பார்த்து ஆசைப்படக் கூடாது என்று எண்ணும்போது, மற்றவன் பெண்டு பிள்ளைகளைப் பார்த்து நீ ஆசைப்படலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’