பாட்னா, ஜூன்18- மேற்குவங்காளத்தின் ஜல்பாய்குரியில் பயணிகள் ரயில்மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விபத்துக்கு மோடி அரசின் தவறான நிர்வா கமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
அந்த வகையில் பீகார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், மேனாள் ரயில்வே அமைச்சருமாகிய லாலு பிரசாத்யாதவ் இந்த விபத்து தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “நாடு முழுவதும் நிகழும் ரயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.