கும்பகோணம், ஜூன் 18- கும்பகோணம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கும்பகோணம் பெரியார் மாளிகையில்15.6.2024 சனி மாலை 7 மணிக்கு மாதாந்திர தொடர் கூட்டம் தொடங்கப்பட்டது. பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்கள், திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகனிடம், திருவிடைமருதூர் ஒன்றிய ப.க. அமைப்பாளர் ராதா கிருஷ்ணன் ஓராண்டு விடுதலை சந்தாவும், கும்பகோணம் ஒன்றிய ப.க. அமைப்பாளர் ஞானம் அரையாண்டு விடுதலைச் சந்தாவும் வழங்கினார்கள். மாவட்ட திராவிடர் கழக தலைவர் நிம்மதி கு.குடந்தை மாநகர தலைவர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
கும்பகோணத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மாதாந்திர கூட்டம்

Leave a Comment