மூடநம்பிக்கையின் குரூரம் குழந்தையைக் கொன்ற தாத்தா கைது!

Viduthalai
2 Min Read

ஜெயங்கொண்டம், ஜூன் 18- ஜெயங்கொண்டம் அருகே சித்திரை மாதத்தில் பிறந்ததால் குடும்பத்திற்கு ஆகாது என மூடத்தனமாக நம்பி பிறந்து 38 நாளேயான பேரனை தண்ணீர்த் தொட்டிலில் மூழ்கடித்து கொன்ற தாத்தா கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளா ளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து, ரேவதி இணையரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். 38 நாட்களுக்கு முன்னர் உள்ளது. பிறந்த ஆண் குழந்தையுடன் சங்கீதா, உட்கோட்டையில் தனது பெற்றோர்களுடன் இருந் துள்ளார். கடந்த 14ஆம் தேதி அதிகாலையில் குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந் துள்ளார் சங்கீதா.

தேடி பார்த்ததில் வீட்டு க்குப் பின்புறம் இருந்த தண்ணீர்த் தொட்டியில் போர்வையுடன் குழந்தை மூழ்கடிக்கப்பட்டு இறந்து கிடப்பது கண் டறியப்பட்டது. அதிர்ச்சி அடைந்த தாய் சங்கீதா கதறி அழுதுள்ளார். ஜெயங்கொண்டம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு, குழந்தை யின் இறப்பு குறித்து விசா ரணை நடத்தினர்.
குழந்தையின் தாத்தா வீரமுத்து, பாட்டி ரேவதி ஆகியோரிடம் காவல்துறையினர் விசா ரணை செய்தில் சந்தேகம் எழுந்த நிலையில், தாத்தா வீரமுத்துவை தனி இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் தனது பேரனை தானே கொன்றதாக வீரமுத்து ஒப்புக் கொண் டுள்ளார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், குழந்தை யின் தாத்தா வீரமுத்து (வயது 58) என்பவர் சித்திரை மாதம் குழந்தை சாத்விக் பிறந்ததால், தனது குடும்பத்திற்கு ஆபத்து என்றும், தனது சம்பந்தி குடும்பத்திற்கும் ஆபத்து என்றும் அனை வரும் கூறியதாலும் நடுமகள் சங்கீதாவின் திருமணத்திற்கு ஏற் கெனவே நிறைய கடன் வாங்கியதாலும் மேலும் இந்த குழந்தை பிறந்ததால் இதற்கு சீர் செய்ய வேண்டிய கடன் வாங்கியதாலும் விரக்தியில் இருந்துள்ளார்.

மேலும் தனக்கு மூன்று பெண் பிள்ளைகள் மட்டுமே உள்ளதால், ஆண் மகன் இருந்தால் சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் அவனது உயிருக்கு ஆபத்து என்றும், ஆண் மகன் இல்லாததால் தாத்தாவாகிய தன்னு டைய உயிருக்கு ஆபத்து என்றும் சிலர் கூறியதால் முதலில் குழந்தையை தூக்கிக் கொண்டு எங்கேயாவது விட்டு விட்டு வந்து விடலாம் என்று எண்ணினேன். உயிர் பயத்தால் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு அதிகாலை குழந்தையை தூக்கிக் கொண்டு தண் ணீர் நிரம்பிய தொட்டியில் போட்டு போர்வையை போட்டு மூடியை போட்டு மூடி விட்டு வீட்டில் வந்து அதிகாலை அனைவரையும் எழுப்பி குழந்தை எங்கே என்று காணவில்லை என்று தானும் உடன் தேடி தண்ணீர்த் தொட்டியில் இருந்து குழந்தையை கண்டுபிடித்து சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக் கொண்டு வந்து சேர்த்ததாக கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *