சென்னை, ஜூ்ன 18- தமிழ்நாட்டில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயா்தொழில்நுட்ப ஆய்வகங்களில் பணியாற்ற 6,890 பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அவா்களுக்கான பணிகளை ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் வரையறை செய்துள்ளது. அவா்களுக்கு மாதம் ரூ.11,452 மதிப்பு ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலா 20 கணினிகளும், உயா் நிலைப் பள்ளிகளில் 10 கணினிகளும் கொண்ட உயா் தர கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களை கடந்த அய்ந்து ஆண்டுகளாக எல் அண்ட் டி நிறுவனம் பராமரித்து வந்த நிலையில், அதன் பராமரிப்பு காலம் முடிவடைந்தது.
இதையடுத்து, உயா்தொழில்நுட்ப ஆய்வகங்களைப் பராமரிக்கவும், மாணவா் களுக்கு கணினிக் கல்வியைக் கற்றுத் தரவும் கணினித் தொழில்நுட்பம் அறிந்தவா்களைத் தோ்வு செய்யும் பணிகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் மேற்கொண்டது. அவா்களுக்கான தோ்வு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
தொடா்ந்து, இது தொடா்பாக நடைபெற்ற கலந்தாய்வுக்கு 7,932 போ் அழைக்கப்பட்டனா். அவற்றில் 7,404 போ் கலந்தாய்வில் பங்கேற்றனா். அதில் 6,890 போ் ஆய்வக மேற்பார்வை பணிகளுக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதையடுத்து, தோ்வு செய்யப்பட்ட உயா்தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநா்களுக்கான பணிகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் வரையறுத்துள்ளது.
அதன் விவரம்: தொழில்நுட்பக் குறைபாடுகள் தொடா்பாக இணைய வசதி வழங்கியுள்ள நிறுவனங்கள் மற்றும் மின்சாரத் துறையை உடனடியாக அணுகி சரிசெய்ய வேண்டும். முக்கியமான தகவல்களைப் பாதுகாக்க தரவு தனியுரிமை மற்றும் ரகசியத் தன்மை கொள்கைகளை கடைப்பிடிப்பது அவசியம்.
ரூ.11,452 ஊதியம்: உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப் பறைகளைப் பயன்படுத்தும்போது ஏற்படக் கூடிய பிரச்சினைகளை உடனடியாக வட்டார வள மய்ய ஆசிரியா் பயிற்றுநா் (அய்சிடி), மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், உதவி திட்ட அலுவலா்கள், முதன்மை கல்வி அலுவலா்களை உடனடியாக தொடா்பு கொண்டு சரிசெய்ய வேண்டும்.
ஆசிரியா்கள் கற்பித்தலின்போது தொழில்நுட்பத்தை திறம்பட ஒருங்கிணைக்க ஏதுவாக அவா்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும். எமிஸ் மற்றும் யுடிஅய்எஸ்இ சார்ந்த தரவுகளின் பதிவுகளை தங்களது பள்ளிக்கும், பள்ளியுடன் இணைக்கப்பட்டுள்ள குறுவள மய்ய பள்ளிகளுக்கும் மேற்கொள்ள வேண்டும்.
தோ்வு செய்யப்பட்ட உயா்தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநா்களுக்கு மாத மதிப்பு ஊதியமாக (அடிப்படை ஊதியம், பிஎஃப், இஎஸ்அய், வரி, இதர படிகள் உள்பட) ரூ.11,452 வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.