கொல்கத்தா, ஆக. 28 மதுரை ரயில் விபத்து சம்பவத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயிலில் 60-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு அருகே ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலில் திடீரென 26.8.2023 அன்று அதிகாலை 5.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தடையை மீறி சமையல் எரிவாயு உருளை ரயிலில் எடுத்து சென்று சமையல் செய்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தெற்கு ரயில்வே தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார். இந்த நிலையில், மதுரை ரயில் விபத்து சம்பவத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதுரையில் ரயில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல் களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன்.
மதுரை ரயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணம் யார் என்று விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க ரயில்வே அதிகாரிகள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத் துகிறேன். இவ்வாறு குறிப்பிட் டுள்ளார்.