புதுடில்லி, ஜூன்.17- நீட் தேர்வு முறை கேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் நேர்மைமீது கேள்வி எழுந்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடு
மருத்துவ படிப்புகளுக் கான நீட் தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் இதுவரை இல்லாத வகையில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண்கள் பெற்றது, அரியானாவில் ஒரே தேர்வு மய்யத்தில் தேர்வு எழுதிய 6பேர் முழு மதிப்பெண் பெற்றது மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது போன்றவை பெரும் சர்ச்சையை கிளப்பின.
இதன் மூலம் நீட்தேர்வில் பெரிய அளவில் முறைகேடு கள் நடைபெற்றது அம்பல மாகி இருப்பதாக கூறி எதிர்க் கட்சிகள் பலவும் மத்திய அர சுக்கு கடும் கண்டனம் தெரி வித்து வருகின்றன. அதே சமயம் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட் டமாக மறுத்து வருகிறது.
இந்த நிலையில் தேசிய தேர்வு முகமையின் நேர்மை மற்றும் நீட் தேர்வு வடிவமைக் கப்பட்ட மற்றும் நிர்வகிக்கப் படும் விதம் குறித்து தீவிர மான கேள்விகள் எழுந்துள்ள தாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செய லாளர் ஜெய் ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி யுள்ளதாவது:-
நான் 2014 மற்றும் 2019-க்கு இடையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் தொடர்பான நாடாளுமன்றத்தின் நிலைக் குழுவில் உறுப்பினராக இருந் தேன். அப்போது பல எம். பி.க்கள், குறிப்பாக தமிழகத் தைச்சேர்ந்தஎம்.பி.க்கள், நீட் தேர்வானது சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு சலுகை அளிக்கும் என்றும், சி.பி. எஸ்.இ. அல்லாத பள்ளிகளில் இருந்து வரும் இளைஞர்க ளுக்கு பாதகமாக இருக்கும் என்றும் கவலை தெரிவித்தனர்.
நீட் தேர்வு பாரபட்சமா?
இப்போது அந்த சி.பி. எஸ்.இ. பிரச்சினைக்கு சரி யான பகுப்பாய்வு தேவை என்று நான் நினைக்கிறேன். நீட் தேர்வு பாரபட்சமா? ஏழைப்பின்னணியை சேர்த்த மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா? என்பதை ஆராய வேண்டும். ஏனெனில் மராட்டியம் போன்ற பிற மாநிலங்களும் நீட் தேர்வில் கடுமையான சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளன.
-இவ்வாறு ஜெய்ராம்ரமேஷ் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை
இதனிடையே நீட் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான கபில் சிபல் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து அரசியல் கட்சி களும் நீட் பிரச்சினையை வலுவாக எழுப்ப வேண்டும். ஆனால் அது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில் நம்பிக்கை இல்லை. ஏனெனில் இந்த விவகாரம் நீதித் துறை என்றுகாரணம் காட்டி அரசாங்கம் அதை அனுமதிக்காது.
தற்போதைய தேசிய தேர்வு முகமை குழப்பம் மற்றும் ஊழலில் மூழ்கியுள்ளதை ஊடகங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. இது தேசிய அளவில் மிகுந்த அக்கறைக்குரிய விஷயமாகும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும். நாட்டின் இளைஞர்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்ப அனைத்து அரசியல் கட்சிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
-இவ்வாறு கபில் சிபல் கூறினார்.