புதுடில்லி, ஜூன் 16- அரசின் பல்வேறு சேவை களுக்கு ஆதார் கார்டு அவசியம். பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் ஆதார் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்தது.
கடந்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு முன் னர் எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மய்யத்தை அணுகலாம் அல்லது மை ஆதார் என்ற இணைய தளத்திலும் புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி பொதுமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை புதுப்பிக்கத் தொடங்கினர்.
ஆன்லைன் மூலம் புதுப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது. நேரில் ஆதார் சேவை மய்யத்திற்கு சென்று திருத்தம் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தப் பணி மந்தமாக நடைபெற்றதால் தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. ஆதார் தகவல்களை கட்டணமின்றி புதுப்பிக்க, முதலில் 2023 டிசம்பர் 23ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலை யில், அடுத்து 2024 மார்ச் 13, ஜூன் 14 என அடுத்தடுத்து இந்த அவகாசம் நீட்டிக்கப் பட்டது.
இந்த அவகாசம் இன் றுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு அதாவது, செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, இனி செப்டம் பர் 14ஆம் தேதி வரை கட்டணம் இன்றி ஆதாரில் திருத்தங்களை செய்யலாம்.இந்தியாவில் ஆதார் கார்டு என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது.
அரசின் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியம். பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆதார் தொடர் பான மோசடிகளைத் தடுக்க, 10 ஆண்டுகளாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களை புதுப்பிக்கு மாறு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தனித்துவ அடையாள ஆணையம் ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக ஆதார் விவரங்களை மாற்ற முடியும். https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணைதளத்தில் லாக் இன் செய்து ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம்.