சென்னை, ஜூன் 15- டெல்டா மாவட்ட உழவர்களின் நலன் கருதி, டெல்டா குறுவை சாகுபடிச் சிறப்புத் திட்டம் அறிவிறித்துள்ளோம் எனவும், இத்திட்டத்தின் பயன் முறையாக உழவர் பெருமக்களுக்குச் சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
டெல்டா குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் 2024-அய் யொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள
சமூக வலை தளப்பதிவு வருமாறு:
பருவமழை தாமதமாகி வருவதால் டெல்டா மாவட்ட உழவர்களின் நலன் பாதிப்படையக் கூடாதென டெல்டா குறுவை சாகுபடிச் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளோம்.
இத்திட்டத்தின் பயன் முறையாகச் சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்.
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.