சென்னை மாநகராட்சியில் ரூ. 5 கோடி செலவில் அம்மா உணவகங்கள் சீரமைப்பு

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 15- சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்கள் ரூ.5 கோடி செலவில் சீரமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏழை மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்க, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 2013ஆம் ஆண்டு அம்மா உணவகங்களைத் தொடங்கினார். சென்னை மாநகராட்சியில் அரசு பொது மருத்துவமனை உட்பட வார்டுக்கு ஒன்று வீதம், 207 உணவகங்கள் திறக்கப்பட்டன.

பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்ததால், 2016ஆம் ஆண்டு, வார்டுக்கு 2 வீதம், 407 உணவகங்களாக அதிகரிக்கப்பட்டது.

நீதிமன்ற வழக்கு, மெட்ரோ ரயில் பணி உள் ளிட்ட காரணங்களால் 16 உணவகங்கள் மூடப்பட்டன. தற்போது, 391 உணவகங்கள் கடந்த 11 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும், 120 கோடி ரூபாய் இழப் பில் செயல்படுகிறது. இழப்பை ஈடுசெய்ய, எந்தவித புது திட்டமும் அறிமுகப்படுத்தவில்லை. உணவகத்தின் சுவை ஒரே விதமாக இருப்பதால், சாப்பிடும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ரூ.5 கோடியில் சீரமைப்பு

இழப்பை ஈடுசெய்ய, ‘நமக்கு நாமே திட்டம்’ வாயிலாக, தனியார் நிறு வனங்கள் பங்களிப்புடன் தொடர்ந்து நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல, சாப்பாட்டின் வகைகளை மாற்றி, சுவையாக வழங்கினால், விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில் சுமார் ரூ.5 கோடி செலவில் அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்ப டுத்த மாநகராட்சி நிர் வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக மாநக ராட்சி அதிகாரிகள் தெரி வித்தனர். அனைத்து அம்மா உணவகங்களின் கட்டடங்களை சீர மைத்து, வண்ணம் பூசி புதுப்பொலிவுடன் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவகங்களின் சமையல றையில் குளிர்பதனப்பெட்டி, கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட பழுதடைந்த எந்திரங்கள், சமையலறை பொருட்களை மாற்றவும்,மண்டல அதிகாரி களுக்கு, மாநகராட்சி சுற்றறிக் கையை அனுப்பி உள்ளது. வரும் காலங்களில், அம்மா உணவகம் தொடர்பாக புகார் வந்து, மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆலோசனை

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “அம்மா உணவகங்களை” மூடும் எண்ணம் இல்லை. அதிகாரிகள் நடத்திய ஆய் வில், ஆரம்பத்தில் அம்மா உணவகங்களுக்கு வந்த பயனாளிகள், இப்போது வருவ தில்லை என்பதும் தெரிந்தது. இதனால், அனைத்து அம்மா உண வகங்களையும் சீரமைத்து புதுப்பொலிவுடன் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பயனாளிகளின் வருகையை அதிகரிக்க, சுவையான புதிய உணவு வகைகளை அறிமுகப் படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *