ஒன்றிய அரசின் மிகப் பெரிய ஊழல்
புதுடில்லி, ஆக 29 பாஜகவிற்கு அதிக நன்கொடை அளித்த நிறுவ னங்களுக்கு மட்டுமே பாரத்மாலா திட்டப் பணிகளை வழங்கி ஒன்றிய மோடி அரசு மெகா ஊழலை அரங்கேற்றியுள்ளது.
மோடி அரசின் 7 மெகா ஊழல் களை அம்ப லப்படுத்தியுள்ள ஒன்றிய தணிக்கைக் குழு வின் அறிக்கை நாடு முழுவதும் சர்ச்சைப் புயலை உருவாக்கியுள்ளது. ஏழு திட்ட முறைகேடுகளில் முக்கிய மானதாக இருக்கும் சாலைகள், நெடுஞ்சாலைகள் விரைவுச் சாலை களை இணைக்கும் பாரத் மாலா திட்டத்தில் அதிக நன்கொடைக்காக மோடி அரசு மெகா ஊழலை அரங் கேற்றியுள்ளது. ஒன்றிய தணிக்கைக் குழு அறிக்கைகளில் பாரத்மாலா திட்டத்திற்கு அனுமதி வழங்கப் பட்ட நிறுவனங்களின் பட்டியலை விரிவாக அளித்துள்ளது. அதில் பாஜகவிற்கு அதிக நன் கொடை அளித்த அதானி உள்ளிட்ட நிறு வனங்க ளுக்கு மட்டுமே பாரத்மாலா திட்டப்பணிகள் ஒதுக்கப்பட்டுள் ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எல்லாமே அதானிக்காக…
தெலங்கானா மாநிலத்தின் சூர்யாபேட் – கம்மம் இடையிலான தேசிய நெடுஞ்சாலை யை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் திட்டம் சூர்யாபேட் – கம்மம் ரோடு பிரைவேட் லிமிடெட் என்ற பெய ருடைய நிறுவனத்திற்கு வழங்கப்பட் டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை யில் கட்டுமானப் பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை சூர்யா பேட் – கம்மம் ரோடு பிரைவேட் லிமிடெட் நிறு வனம் பின்பற்றவில்லை. சூர்யாபேட் – கம்மம் ரோடு பிரைவேட் லிமி டெட்டின் இயக்குநர் வேறு சில நிறுவனத்தின் அனுபவச் சான்றி தழை சமர்ப்பித்துள்ளார். சமர்ப்பிக் கப்பட்ட நிறுவனங்களின் அனு பவச் சான்றிதழை ஆய்வு செய்து பார்க்கையில் கட்டுமானத் துறை யில் ஒரு வேலை கூட அந்நிறுவனம் செய்யவில்லை. மேலும் சூர்யாபேட் – கம்மம் ரோடு பிரைவேட் லிமிடெட்டின் நிகர மதிப்பின் மீது பட்டய கணக்காளர் சான்றிதழுக்கு ரூ 304.33 கோடி தேவை என்ற நிலையில், எல்லாம் மூன்றாம் தரப்பினரின் பெயரில் இருப்பதாக சிஏஜி அறிக்கை கூறியுள்ளது.
சூர்யாபேட் – கம்மம் ரோடு பிரைவேட் லிமி டெட் குழுமத்தில் அதானி நிறுவனம்தான் 74% பங்கைக் கொண்டிருக்கிறது. இந் நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எந்த விளக்க காரணமும் அளிக்காமல், ஏலதாரர் தொழில்நுட்ப ரீதியாக தகுதி பெற்றதாக மார்ச் 2019இல் ஏல திட்ட மதிப்பான ரூ.1,566.30 கோடி யில் நான்கு வழிச்சாலை திட்டத்தை வழங்கி யது. இத்திட்டத்திற்கான மொத்த செலவில் 40 சதவீதத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் செலுத்தியது. மீதமுள்ள 60 சதவீ தத்தை சாலை மேம்பாட்டாளர் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், அதானி நிறுவனப் பங்குகள் கொண்ட ஏலதாரர் திட்டச் செலவில் 20-25 சத வீதத்தை மட்டும் அளித்து, மீதமுள்ள தொகை யை கடனாக வைத்தது என சிஏஜி அறிக்கை குறிப்பிடுகிறது.
லக்னோ ரிங் ரோடும் நவீன் ஜெயினும்
உத்தரப்பிரதேச மாநில தலை நகர் லக்னோ நகரத்திற்கு ஒதுக்கப் பட்ட சுற்றுச்சாலை தொகுப்பு 1 இன் திட்டப்பணியை பிஎன்ஆர் இன்போடெக் நிறுவனம் கைப் பற்றியது. மார்ச் 7, 2019 அன்று சுற்றுச்சாலை பணிக்கான ஏலத் தொகை ரூ.904.31 கோடி மதிப்பீட்டில் வெளி யிடப்பட்டது. ஆனால் பிஎன்ஆர் இன்போடெக் நிறுவனம் ஏலத்தொகையை விட அதிகமாக அதாவது ரூ.1,062 கோடிக்கு லக்னோ சுற்றுச்சாலை திட்ட பணியை வாங்கியது. முக்கிய மாக ஏல விலை திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட 2.02% சதவி கிதம் அதிகமாக இருந்தது. பிஎன் ஆர் இன்போடெக் நிறுவனம் நவீன் ஜெயின் என்ற பாஜக தலைவருக்கு சொந்தமானது ஆகும். நவீன் ஜெயின் பாஜக சார்பில் ஆக்ரா நகர மேயராக இருந்தவர்.
அய்ஆர்பி இன்ப்ராஸ்ட்ரக்சர் – பாஜகவுக்கு ரூ.65 கோடி நன்கொடை
கடந்த 2018இல் பாஜக ஆளும் உத்தரப்பிர தேசத்தின் ஹாபூர் பைபாஸ் -மொராதாபாத் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கான ஆண்டு பிரீ மியம் ரூ.97.77 கோடி மற்றும் 22 ஆண்டு சலுகைக் காலத்துடன் திட்டத்திற்கான ஏலங்களுக்கு தேசிய நெடுஞ்சாசலை ஆணையம் அழைப்பு விடுத்தது. ஐஆர்பி இன்ப்ராஸ்ட்ரக்சரின் ஏலத் தை ஆண்டு பிரீமியமாக ரூ.31.50 கோடிக்கு ஏற்றுக்கொண்டது. ஆனால் திடீரென அய்ஆர்பி இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவன இணையதளம் இந்த திட்டம் ரூ.3,345 கோடி மதிப்புடையது என்று கூறி யுள்ளது.
“திட்டத்தின் ஏலத் தேதியிலி ருந்து ஒரு வாரத் திற்குள் தேசிய நெடுஞ்சாலை ஆணைய பார் வையில் மாற்றம் ஏற்பட்டது. தேசிய நெடுஞ் சாலை ஆணையம் மதிப்பீட்டில் ஏற்பட்ட பிழையை எந்த நியாயமான காரணங்களும் பதிவு செய்யாமலும் மறு டெண் டருக்கு செல்லாமலும் ஏற்றுக் கொண்டது” என சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அய்ஆர்பி இன்ப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் நிறுவனம் 2013 முதல் 2021 வரையிலான கால கட்டத்தில் பாஜகவுக்கு ரூ. 77 கோடிக்கு மேல் நன்கொடையாக வழங்கியுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
ஜே.குமார் இன்ப்ரா புராஜெக்ட்ஸ் – பாஜகவுக்கு ரூ.6.46 கோடி நன்கொடை
2018 டிசம்பரில் துவாரகா எக்ஸ்பிரஸ் வே தொகுப்பு 1-க்கான ரூ.1,349 கோடி திட்டப்பணி ஒப் பந்தத்தை ஜே.குமார் இன்ப்ராபுரா ஜெக்ட்ஸ் வென்றது. வெற்றிகரமான ஏலதாரர் குறைந் தபட்சம் “ஒற்றை அல்லது இரட்டைக் குழாய்க ளைக் கொண்ட ஒரு ஆழமான அல்லது ஆழ மற்ற சுரங்கப்பாதை” கட்டு மானத்தை முடித்தி ருக்க வேண்டும் என்று முன்மொழிவு நிபந்தனைக் கான கோரிக்கையை நிறுவனம் நிறைவேற்றத் தவறிய போதிலும் ஒப்பந்தத்தை அந்நிறுவனம் வென்றது.
2015 மற்றும் 2016க்கு இடையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தின் தலைவராக இருந்த மேனாள் அய்ஏஎஸ் அதிகாரியான ராகவ் சந்திரா ஜே.குமார் இன்ப்ராப்ரா ஜெக்ட்ஸ் நிறுவனத் தின் சுயாதீன இயக்குநர்களில் ஒருவரும், ஜிஆர் இன்ப்ராபுராஜெக்ட் துணை நிறுவன மான ஜிஆர் ஹைவேஸ் இன்வெஸ்ட்மென்ட் மேலாளராக வும் உள்ளார். அதானி குழுமத் தின் வணிக கூட்டாளியான வெல்ஸ்பன் எண்டர் பிரைஸ் இயக்குநராகவும் உள்ளார். அதானி குழுமம் மற்றும் வெல்ஸ்பன் எண்டர்பிரைசஸ் ஆகியவை அதானி வெல்ஸ்பன் எக்ஸ்ப்ளோ ரேஷன் என்ற எரிவாயு ஆய்வு கூட்டு முயற்சியைக் கொண் டுள்ளன. ஜே.குமார் இன்ப்ரா பிராஜெக்ட், வெல்ஸ்பன் எண்டர் பிரைஸின் 50.10 சதவீத உரிமையைக் கொண்ட மிச்சிங்குன் இன்ஜினி யர்ஸ் நிறுவனத்துடன் வணிக உறவுகளையும் கொண்டுள்ளது. ஜே.குமார் இன்ப்ராபுராஜெக்ட் 2015இல் சாலை ஊழல் தொடர்பாக 2016இல் பிரஹன் மும்பை முனிசி பல் கார்ப்பரேஷனால் தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த ஊழலின் விளைவு, மும்பையில் கட்டப்பட்டுக் கொண்டி ருந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததால் செய்தி யாகியது. மகாராட்டிராவில் உள்ள பாஜக அரசு அந்த நிறுவ னத்துக்கு திட்டத்தின் ஒப்பந்தத்தை வழங்கியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. 2013 மற்றும் 2018க்கு இடையில் ஜே.குமார் இன்ப்ராபுராஜெக்ட்ஸ் பாஜகவிற்கு சுமார் ரூ.6.46 கோடி நன்கொடை அளித்தது. 2017-_2018இல் கட்சிக்கு ரூ.5.25 கோடியும், 2015-16இல் ரூ.1 கோடியும், 2013-_2014இல் ரூ.21 லட்சமும் பாஜக நன்கொடையாக பெற்றது. 5 நிறுவ னங்களின் நன்கொடைகள் டில்லி – வதோதரா விரைவுச்சாலையின் 17 முதல் 25 வரையிலான தொகுப்புக ளுக்கு ஜியாங்சி கன்ஸ்ட்ரக்சன் இன்ஜினியரிங் கார்ப்ப ரேஷன், எம்கேசி இன்ப்ராஸ்ட்ரக்சர், ஜிஆர் இன்ப்ராபுராஜெக்ட்ஸ், லார்சன் & டூப்ரோ மற்றும் ஜிஎச்வி இந்தியா ஆகிய 5 நிறுவனங்களை உள்ள டக்கிய கூட்டு ஒப்பந்தம் வழங்கிய தில் மிகப்பெரிய முறைகேடுகள் இருப்பதாக சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
டில்லி-வதோதரா விரைவுச் சாலையின் கட்டு மானத்திற்கு முந்தைய செலவு ரூ.11,209.21 கோடி என மதிப்பிடப்பட்ட நிலையில், அதன் பிறகு 31 திட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்று கூறி மொத்த செலவு ரூ.32,839 கோடி என்று கூறப்பட்டுள்ளது. முறை கேடு என்று தெரிந்தே எட்டு திட்டங்களுக்கு மே 2019 முதல் ஜூன் 2020 வரை அனுமதி வழங்கப் பட்டது. இந்த எட்டு திட்டங்களில், அய்ந்து ஜிஆர் இன்ப்ரா புரா ஜெக்ட்ஸ், ஒன்று ஜிஹெச்வி இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ஒன்று எல்&டி மற்றும் இரண்டு எம்கேசி இன்ப்ராஸ்ட்ரக்சர் மூலம் செயல்படுத்தப்பட்டன.
ஜிஆர் இன்ப்ராபுராஜெக்ட்ஸின் கீழ் பீகார் மாநிலம் கிஷன்கஞ்சில் கட்டப்பட்டு வந்த பாலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இடிந்து விழுந்தது. சாலை திட்ட பில்களை நேர் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஊழியர்கள் குற்றம் சாட் டப்பட்டதை அடுத்து, பல் வேறு அலுவலகங்களிலும் சிபிஅய் சோதனை நடத்தியது. பழைய கட் டண அட்டவணை அடிப்படையில் தவறான மதிப்பீடுகளை தீர்மானித்த நிலையில், ஒப்பந்தம் அழைப்பதற் கான அறிவிப்பு வெளியிடப் படுவ தற்கு முன்பே புதுப்பிக்கப்பட்ட கட்டணங்கள் கிடைத்ததாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சமாளித் துள்ளது. எல்&டி நிறுவனம் 2014-_2015இல் பாஜகவுக்கு ரூ.5 கோடி நன்கொடையாக வழங்கிய நிலை யில், எம்கேசி இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் 2018 முதல் 2020 வரை பாஜகவுக்கு ரூ.75 லட்சம் நன் கொடை அளித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய லஞ்ச வழக் கில் ஜிஎச்வி இந்தியா குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் ஆகும்.