ஒத்தி வைப்பு
ஜூன் 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தடை
இனி உரிய தமிழ்நாட்டின் பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் வரும் நாளை 14ஆம் தேதி முதல் மாநிலத்தில் இயக்க அனுமதி இல்லை.
சிகிச்சை
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் புதிய மருத்துவக் காப்பீடு மூலம் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற முடியும் என சுகாதாரத் துறைச் செய்லாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்.
அனுமதி
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் பாணியில் இந்தியாவிலும் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நோய் தடுப்புப் பணி
தென் மேற்கு பருவ மழைக்கான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், நோய் தடுப்புப் பணிகளை தீவிரப் படுத்த வேண்டும் என்றம், கொசு ஒழிப்புப் பணிகளில் 3,278 பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் எனவும் சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா தகவல்.
மாநிலங்களவையில்
மாநிலங்களவையில் இருந்து மக்களவைக்கு சில உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து 10 இடங்கள் காலியாகி உள்ளன.