விழுப்புரம்,நவ.19- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக ளிர், விவசாயிகளின் முன்னேற்றத் துக்கும் கூட்டுறவுத் துறை முக்கியப் பங்காற்றுவதாக தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன் முடி கூறினார்.
விழுப்புரம் மாவட்ட கூட்டுற வுத் துறை சார்பில் 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா விழுப்புரத்தில் 16.11.2023 அன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் பங் கேற்று 208 பயனாளிகளுக்கு ரூ.10.5 கோடி மதிப்பிலான அரசின் நலத் திட்ட உதவிகளையும், கூட்டு றவு வார விழா பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினர். விழாவில் அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது:
தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறையால் அனைத்துத் தரப்பு மக்களின் நலன் பாதுகாக்கப்படு கிறது. மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சிக்கும், விவ சாயத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தும் வகையிலும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
கூட்டுறவுத் துறைக்குத் தேவை யான நிதியை ஒதுக்கீடு செய்யவும், விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், மாற்றுத் திறனாளிக ளுக்கு கடனுதவிகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட் டங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தொடங்கப்பட்டன. மாவட்டத்தில் 221 கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின் றன.
இவற்றில் அதிகப்படியான உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு மக ளிர் சுயஉதவிக் குழுவினர், மாற்றுத் திறனாளிகளுக்கான கடனுதவி, கால்நடை பராமரிப்புக்கு கடனு தவி, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கடனுதவி வழங்கப் பட்டுவருகிறது என்றார் அமைச் சர் க.பொன்முடி.
விழாவில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசுகையில், மேனாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவாக கூட்டுறவு வார விழா ஆண்டுதோறும் கொண்டா டப்பட்டு வருகிறது. ‘கூட்டுறவே நாட்டுயர்வு’ என்பதற்கேற்ப கூட் டுறவுச் சங்கங்கள் சார்பில் பல் வேறு திட்டங்களும், நல உதவிக ளும் வழங்கப்பட்டு வருகின்றன, என்றார்.
விழாவிற்கு விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் துரை.ரவிக் குமார் முன்னிலை வகித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), இரா.லட்சுமணன் (விழுப்புரம்), ச.சிவக்குமார் (மயிலம்), ஏ.ஜெ.மணிக் கண்ணன் (உளுந்தூர்பேட்டை), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலை வர் ம.ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டுறவுச் சங்கங்களின் மண் டல இணைப் பதிவாளர் ச.யசோதா தேவி திட்ட விளக்கவுரையாற்றினார். விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் சீலாதேவி சேரன், கூட்டுறவுச் சங் கங்களின் தலைவர்கள் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதி வாளர் சொ.இளஞ்செல்வி வர வேற்றார். நிறைவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சார்-பதிவாளர் மா.சந்திரசேகர் நன்றி கூறினார்.