புதுமை முயற்சி
கொழுப்புச் சத்து நிறைந்த பால் உற்பத்தியை அதிகரிக்க, புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் 2000 எருமைக் கன்றுகளை ஆவின் நிறுவனம் தத்தெடுத்துள்ளதாக அதிகாரிகள் தகவல்.
நியமனம்
தமிழ்நாடு மக்கள் நீதிமன்றத் தலைவராக ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ராஜாராமை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பரிந்துரைக்கவில்லை
ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்த குழு, பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் அடுத்த சில நாள்களுக்கு படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
சாதனை
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மூன்று ஆண்டு கால ஆட்சியில். 6,348 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்டு தாழ்த்தப்பட்டோர் – பழங்குடியின இளைஞர்கள் இந்தியாவிலேயே முதன்முதலாக தொழில் முகவர்களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளனர்.
சான்றிதழ் அவசியம்
தமிழ்நாட்டில் பதிவு பெற்ற மருத்துவரிடம் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்க முடியும் என்றும், இதற்காக சாரதி மென்பொருளில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்கள் சான்றிதழ்களை உள்ளீடு செய்ய வேண்டும் என்றும் போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.
தொடக்கம்
புதிதாக ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்த 2 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
ஆய்வு
அய்அய்டி மெட்ராஸ் மற்றும் நாசாவின் ஜெட் புரோபல்ஷன் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் மருந்து – எதிர்ப்பு நோய்க் கிருமிகளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்திற்கும் பூமியில் வசிப்போருக்கும் இதனால் முக்கிய பயன்பாடுகள் கிடைக்கப் பெறலாம்.