புவனேசுவரம், ஜூன் 10- ஒடிஸாவின் பாராபதி-கட்டாக் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டி யிட்டு வென்ற காங்கிரசைச் சோ்ந்த சோஃபியா பிர்தோஸ் (32), அந்த மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாறு படைத்துள்ளாா்.
ஒடிசாவில் மக்களவை யுடன் சேர்த்து சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடந்தது. பாராபதி-கட்டாக் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பி னராக இருந்த முகமது மொகிமின் மகள் சோஃபியா களம் கண்டார்.
கடந்த 4-ஆம் தேதி வெளியாகின தேர்தல் முடிவுகளில் பாஜக வேட்பாளரும், பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணருமான பூர்ண சந்திர மகாபத்ராவை 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் சோஃபியா தோற்கடித்தாா்.
1937-ஆம் ஆண்டு முதல் ஒடிசாவில் 141 பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந் துள்ளனர். இருந்தாலும் சோஃபியாவுக்கு முன், எந்தவொரு முஸ்லிம் பெண்ணும் ஒடிசா சட்டப்பேரவைக்குத் தேர்வானதில்லை.
இந்த வரலாற்று வெற்றி தொடர்பாக ‘அய்அய்எம்’ கல்லூரி மேனாள் மாணவியான சோஃபியா கூறுகையில், ‘முஸ்லிம் பெண்ணாக நான் சரித்திரம் படைத் துள்ளேன். ஆனால், ஒடிசா சட்டப்பேரவையில் பெண்களின் பிரதிநி தித்துவம் ஈர்க்கும் வகையில் இல்லை. 147 உறுப்பினர்களில், இந்த முறை 11 பெண்கள் மட்டுமே உள்ளனா். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும். அரசியலில் என்னை ஒரு முன்மாதிரியாக பெண்களால் பாா்க்க முடியும். மேனாள் முதல்வர் நந்தினி சத்பதி எனக்கு முன்மாதிரியாக திகழ்ந்தாா்.
ஏப்ரல் 24ஆம் தேதி எனக்கு போட்டி யிட வாய்ப்பு வழங்கப்பட் டது. மே 25-ஆம் தேதி வாக்குப்பதிவு நடை பெற்றது. இதற்கிடையே ஒரு மாதக் காலத்தில் வாக்காளர்களைச் சந்திக்க ஒவ்வொரு பகுதிக்கும் சென்றேன். மக்களுக்கு என் அப்பாவை நன்றாகத் தெரியும். அவருடைய நற்பெயர் எனக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் புன்னகையுடன் மக்களை சந்தித்தேன். அதனால், ‘ஸ்மைலிங் எம்எல்ஏ’ என்ற பெயரை மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர்.