சந்திரபாபு நாயுடுவிற்கு முக்கியத்துவம் – அமித்ஷாவுக்கு இறக்கம்

2 Min Read

புதுடில்லி, ஜூன் 9– இந்த நிலையில் பிரதமர் மோடி, அமித் ஷாவிற்கு பதிலாக சந்திரபாபு நாயுடுவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம்.
2024 மக்களவைத் தேர்த லில் தனிப்பட்ட வகையில் பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது. என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்து இருந்தாலும் பாஜக தனிப்பட்ட வகையில் பெரும்பான்மையை இழந்து உள்ளது.543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற் றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 40 இடங்களை வைத்து இருக்கும் சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார், ஷிண்டே சிவசேனா ஆகி யோரின் உதவிதான் மோடி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது

தலைவர் மாற்றம்: 2024 மக்களவைத் தேர்த லில் பா.ஜ.க.விற்கு தனி பெரும்பான்மை கிடைக் காத நிலையில் பாஜகவில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடியும் கூட அமித் ஷாவிற்கு பதிலாக சந்திரபாபு நாயுடுவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம்.

பா.ஜ.க.வின் தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டா மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளி யாகி உள்ளது. நட்டாவின் மாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேச மாநில மேனாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய் யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவ ராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேசத்தின் முக்கிய தலைவர்.

சிவராஜ் சிங் சவுகான் இந்த மக்களவைத் தேர்தலில் ஓரங்கட்டப்பட்டார். மோடி, நட்டா, அமித் ஷா மூலம் பிரச்சாரத்திற்கு கூட கொண்டு வரப்படாமல் ஓரம் கட்டுப்பட்டார்.

முதலமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டு வீட்டில் அமர வைக்கப்பட்டார். இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ் அழுத்தம் காரணமாக தற்போது சிவராஜ் சிங் சவுகான் ஆக்டிவ் அரசியலுக்குள் மீண்டும் நுழைந்து உள்ளார்.

அமித் ஷா மவுசு: அதே போல் அமித் ஷாவிற்கு தேசிய அளவில் இனி மவுசு குறையும். அவர் ஏதாவது மாநிலத்தில் முத லமைச்சராக்கப்படலாம். சிவராஜ் சிங் சவுகான் வந் தால் அமித்ஷா அவரின் முடிவில் தலையிட முடியாது.

எதிரி ஆயுதத்தை எடுத்து.. திரும்ப வீசும் போக்கு! பா.ஜ.க.விற்கு காங்கிரஸ் வைக்கும் தடை!
சிவராஜ் சிங் சவுகான் தான் முடிவுகளை எடுப் பார். அதோடு மோடி அமித் ஷாவிடம் அதிகம் அணுகுவதில்லை. அவர் சந்திரபாபு நாயுடுவின் முடிவுகளை கேட்கிறார்.

சந்திரபாபு நாயுடுவின் பேச்சையே அதிகம் கேட்கிறார். அவரின் பேச்சுக்கே கூடுதல் மவுசு தருகிறார்.
அவரின் ஆதரவு இல்லை என்றால் பாஜக ஆட்சி அமைக்க முடியாது. அடுத்த 5 ஆண்டுகள் இவர்கள் சொல்வதையே கேட்க வேண்டும்.
இல்லையென்றால் ஆட்சி கவிழ்ந்து விடும். அதனால் அவரின் பேச் சையே மோடி அதிகம் கேட்கிறார்.
தோல்வி காரணமாக அமித் ஷா மீது அவர் அதிருப்தியில் உள்ளனராம். இதனால் அமித் ஷாவிற்கு தேசிய அளவில் இனி மவுசு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *