நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவாக அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பொத்தனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ப.க தலைவர் வழக்கறிஞர் ப.இளங்கோ தலைமை ஏற்றார். அன்பழகன் வரவேற்புரையாற்றினார்.பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன தலைவர் க.சண்முகம் தொடக்கவுரையாற்றினார். பொத்தனூர் பேரூராட்சி தலைவர் ஆர்.கருணாநிதி முன்னிலை வகித்தார். தமிழ்கேள்வி தி.செந்தில்வேல் சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் சி.சோமசேகர், துணைத் தலைவர் பெருமாள் (எ) முருகவேல், டி.ரங்கசாமி, தங்கமணி, பவுன்ராஜ், வீரமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் மருத.அறிவாயுதம் நன்றியுரை வழங்கினார்.