இளம்பெண்ணிடம் திருமண மோசடி
பா.ஜ.க. எம்.பி. மகன் மீது வழக்கு!
பெங்களூரு,நவ.19– திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய பல்லாரி பா.ஜ., – மக்க ளவை உறுப்பினர் தேவேந்திரப்பா மகன் மீது, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவாகி உள்ளது.
கருநாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடந்து வருகிறது. இங் குள்ள பல்லாரி தொகுதி பா.ஜ., – மக்களவை உறுப்பினர் தேவேந் திரப்பா, 71. இவரது மகன் ரங்கநாத், 42.
இவர், மைசூரில் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர் மீது, பெங்களூரு பசவனக்குடி மகளிர் காவல் நிலையத்தில், 24 வயது இளம்பெண் அளித்த புகார்:
எனக்கும், பல்லாரி தொகுதி பா.ஜ., – மக்களவை உறுப்பினர் தேவேந் திரப்பா மகன் ரங்கநாத்துக்கும், ஒன் றரை ஆண்டுகளுக்கு முன், நண்பர் ஒருவர் வாயிலாக பழக்கம் ஏற்பட் டது.
சில நாட்களுக்கு பின், என்னை காதலிப்பதாக கூறினார். ‘கை நிறைய ஊதியம் கிடைக்கிறது; நன்றாக பார்த்துக் கொள்கிறேன்’ என்றார். இதனால் நானும் அவரை காதலித்தேன்.
அவருக்கு ஏற்கெனவே திரும ணம் ஆகி இருந்தும், அதை என் னிடம் மறைத்தார். மைசூரில் உள்ள விடுதிக்கு அழைத்து சென் றார். திருமண ஆசை காண்பித்து என்னிடம் உல்லாசமாக இருந் தார்.
தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். ‘உன்னால் முடிந்ததை பார்த்து கொள்’ என்று கூறி, கொலை மிரட்டலும் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.
புகாரின்படி, ரங்கநாத் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதி வாகி உள்ளது. இந்நிலையில், ‘என்னை மிரட்டி 15 லட்சம் ரூபாய் பறிக்கப் பார்க்கிறார்’ என்று இளம் பெண் மீது, மைசூரு காவல் நிலை யத்தில் ரங்கநாத்தும் புகார் செய் துள்ளார்.
இதையடுத்து, ஆதாரங்களு டன் விசாரணைக்கு ஆஜராகும் படி, இருவருக்கும் காவல்துறையினர் ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்.
இதற்கிடையில் தேவேந்தி ரப்பா, ரங்கநாத்திடம் நியாயம் கேட்டு, இளம்பெண் அலைபேசி யில் பேசிய பேச்சின் ஒலிப்பதிவு வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற பாஜக உறுப்பினர் தேவேந்திரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் மொபைல் நம்பருக்கு யார் அழைத்தாலும், உடனே எடுத்து பதில் சொல்வேன். அதுபோல ஒரு பெண், என்னிடம் பேசினார். உங் கள் மகன் என்னை மோசம் செய்து விட்டார்.
காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளேன் என்றார். என் மகனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.
என் மகன் தவறு செய்திருந்தால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். அடுத்த ஆண்டு மக்க ளவை தேர்தல் நடக்க உள்ளது.
இதனால், என் பெயரை கெடுக்க, சதி நடக்கிறதா என்ற சந்தேகமும் உள்ளது. காவல் துறையின் விசார ணையில் உண்மை தெரியவரும்.
-இவ்வாறு அவர் கூறினார்.