சென்னை, ஜூன் 8- சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித் தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:-
திருநங்கைகளுக்கு முழுமையாக சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தையும் அளித்து சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளும் பொருட்டு, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் ‘தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம்’ 2008ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த வாரியத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து வரும் 21ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
அன்றைய நாள் அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஒன்றிய அரசின் மருத்துவக் காப்பீட்டு அட்டை ஆகியவற்றை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம், அரசின் நலத்திட்ட உதவிகள் திருநங்கைகளுக்கு சென்றடைவது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.