பாஜக போட வேண்டியது தத்துவார்த்த சண்டை. இந்து, முஸ்லிம் என பிரித்து வாக்குகளை பெறுவது கேரளாவில் சாத்தியமாகலாம், தமிழ்நாட்டில் முடியாது. தமிழ்நாடு எப்போதுமே பலமாக தன் குரலை உயர்த்திப் பேசும் மாநிலமாகும். தொகுதி மறுசீரமைப்பு, நிதி பங்கீடு, மொழிப் பிரச்சினை என அனைத்து விவகாரங்களிலும் தனது மாற்றுக்கருத்துகளை வலுவாக எடுத்து வைத்துள்ளது.