திருத்துறைப்பூண்டி, ஜூன் 7- திருத்துறைப்பூண்டியில் 5.6.2024 காலை 11 மணி அளவில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு நாகை நாடாளுமன்ற வெற்றி பெற்ற வேட்பாளர் வை.செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, நகர தலைவர் சு.சித்தார்த்தன், நகரச் செயலாளர் ப.நாகராஜன் ஆகியோர் சால்வை அறிவித்து சிறப்பு செய்தனர்.
நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.உலகநாதன், ஒன்றிய பெருந்தலைவர் அ.பாஸ்கர், நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன்,
திமுக நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன், திமுக ஒன்றிய செயலாளர் பிரகாஷ், மாவட்ட வர்த்தகரணி துணைச் செயலாளர் சிக்கந்தர், மதிமுக மாவட்ட பொருளாளர் கோவி.சேகர், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் பி.பி.எழிலரசன், வட்டார தலைவர் வி.தியாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜ், மாவட்ட விவசாய சங்க செயலாளர் சாமிநாதன், நகர செயலாளர் கோபு,
ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் சுந்தர், ஒன்றிய செயலாளர் வி.ஜவஹர், முத்துக்குமார், மா.முருகேசன், ஜி.ராமலிங்கம், மனிதநேய மக்கள் கட்சி இக்பால் ராஜா, மற்றும் ஏராளமான அனைத்து கட்சி தோழர்களும் கலந்து கொண்டனர்கள்.