சிறீநகர். ஜூன்.6– காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார் நகரில் மலையின் மீது சிவன் கோவில் ஒன்று இருந்தது. இந்த கோவில் பல பாலிவுட் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளதால் சுற்றுலா பயணிகளிடையே இது மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று (5.6.2024) அதிகாலை இந்த கோவிலில் திடீ ரென தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த சற்று நேரத்துக்குள்ளாக கோவில் முழுவதிலும் பரவியது. கொழுந்து விட்டு எரிந்த தீயால் அங்கு கரும்புகை மண்டலம் எழுந்தது. உள்ளூர் மக்களின் உதவியுடன் காவல்துறையினர் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கோவில் முற்றிலுமாக தீக்கிரையானது.
–
சிவ…சிவ! காஷ்மீரில் சிவன் கோயில் தீ பற்றி எரிந்தது
Leave a Comment