அடுத்தடுத்து அதிர்ச்சி… அதே ஜூன் 2ஆம் தேதி மீண்டும் ரயில் விபத்து… தொடரும் சோகம்!

Viduthalai
2 Min Read

பஞ்சாப், ஜூன் 5-2023 ஜூன் மாதம் 2ஆம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் தண்ட வாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மீதுஷாலிமர் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது.
அதே சமயத்தில் எதிர்த்திசையில் பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரயிலின் கடைசி பெட்டி விபத்தில் சிக்கி தடம் புரண்டு வர லாறு காணாத விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 295 பேர் உயிரிழந்தனர். 1100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ரயில்வே பாதுகாப்பு ஆணையம் இந்த விபத்து குறித்த விசாரணையில் 40 பக்க அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில் தவறான வயரிங், கேபிள் இணைப்பால் தவறான சிக்னல் கிடைத்தது. இதுவே ரயில் விபத்து ஏற்பட காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ரயில்வேயின் சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பிரிவுதான் விபத்துக்கு பொறுப்பு எனக் கூறப்பட்டிருந்தது. இந்த விபத்து குறித்த விசாரணையை சிபிஅய் தனியாக மேற்கொண்டது. அதன்படி ரயில்வே மூத்த பொறியாளர் அருண் குமார்மகந்தோ, பகுதி பொறியாளர் முகமது அமீர் கான் மற்றும் தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் ஆகிய 3 பேரின் மீது வழக்கு பதிவு செய்து சிபிஅய் அதிகாரிகள் கைது செய்தனர்.

அதே போல் இந்த வருடமும் ஜூன் 2ஆம் தேதி மற்றுமொரு விபத்து நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் சிர்ஹிந்த் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மற்றொரு ரயில் பின்னால் நிறுத்தியதில் 2 லோகோ பைலட்டுகள் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த 2 லோகோ பைலட்டுகள் சிறீ ஃபதேகர் சாஹிப் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம் சஹரன்பூரில் வசிப்பவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு விபத்தை நினைத்தாலும் இன்றும் மனதில் எழும் அச்சம் எழும். இந்நிலையில் அதே நாளில் நடந்த இந்த விபத்து நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் பின்னால் இருந்து மோதியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *