கிருட்டினகிரி, ஜூன் 5– கிருட்டினகிரி தேவசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் மனிதநேய இயக்க நிறுவனத்தலைவர் மா. திருப்பதி அவர்களின் 65 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா 02/06/2024-ஞாயிற்றுக்கிழமை கிருட்டினகிரி டி.எஸ்.ஆர் விடுதியில் கிருட்டினகிரி கட்டிகானப்பள்ளி மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக பெருமாள் தலைமையில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத்தலைவர் கோ.திராவிடமணி கலந்துகொண்டு பெரியார் மக்களின் மூச்சுகாற்று என்ற நூலை வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பிறந்தநாள் மகிழ்வாக விடுதலைக்கு ஒரு ஆண்டு சந்தாவை மாவட்டத்தலைவர் கோ. திராவிடமணியிடம் வழங்கினார். உடன் மாவட்டச் செயலாளர் சி.சீனி வாசன், ஒன்றியத் தலைவர் த.மாது, நகரச் செயலாளர் அ.கோ.இராசா, மாவட்ட ப.க.தலைவர் சா.கிருட்டினன், ப.க.தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். 65-வது ஆண்டு பிறந்தநாள் காணும் விடுதலை வாசகர் திருப்பதி ஏழை எளிய மக்களுக்கு ரூ 45,000/- மதிப்பில் இலவசமாக வேட்டி மற்றும் சேலைகள் 300 நபர்களுக்கு வழங்கினார். 02/06/2024.