புதுடில்லி, ஜூன் 5- கடந்த 1-ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அனைத்து நிறுவனங்களும் பா.ஜனதா கூட்டணிக்கு 330 முதல் 392 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று பலவித எண்ணிக்கையில் தங்கள் கணிப்பை வெளியிட்டன. டுடேஸ் சாணக்யா என்ற நிறுவ னம் 400 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று கணித்திருந்தது.
‘இந்தியா’ கூட்டணிக்கு 107 தொகுதிகள் முதல் 182தொகுதிகள் வரை மட்டுமே கிடைக்கலாம் என்று கணிப்பை வெளியிட்டு இருந்தன.
ஆனால் நேற்று (4.6.2024) ஓட்டு எண்ணிக்கையின்போது, இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் பொய்த்துப்போய்விட்டன. பா.ஜனதாவுக்கு தனிப்பெரும் பான்மை கிடைக்கவில்லை. அதன் கூட்டணி 300 தொகுதிகளை கூட எட்டவில்லை. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் காலை வாரியதால், பா.ஜனதாவுக்கு தொகுதிகள் குறைந்தன.
அதே சமயத்தில், 182 தொகு திகள்வரைதான் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘இந்தியா’ கூட்டணி 230 தொகுதிகளை தாண்டியது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், அரியானா ஆகிய மாநிலங்களில் எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றது.