முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஜூன் 4- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு, 101ஆம் பிறந்த நாளில் நேற்று (3.6.2024) தி.மு.க. தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
பிறந்தார் – நிறைந்தார் என்ற வாழ்வின் இரு புள்ளிகளுக்கிடையில்,
தொட்ட துறைகளில் எல்லாம் உச்சம் தொட்டார்!
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்தார்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்!
தமிழினத்தின் எழுச்சிக்காக உழைத்தார்!
வரலாற்றைத் தன்னைச் சுற்றிச் சுழலவிட்டார்!
முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேருழைப்பில் தமிழ்நாடு வளம் பெற்றது! தமிழினம் நலம் பெற்றது!
இந்த நூறாண்டுகளில் நிகழ்ந்துள்ள தமிழ்ப் புரட்சி – தமிழினத்தின் எழுச்சி – தமிழ்நாட்டின் வளர்ச்சி என எங்கும் எதிலும் தலைவர் கலைஞரின் முத்திரை பதிந்துள்ளது. அவரது புகழை நாளும் சொல்வது, நாளை நாம் பெற வேண்டிய வெற்றிகளுக்குப் பாதை அமைப்பதாகும்!
கலைஞர்: வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல; அந்த வானத்தை ஆளும் சூரியன்!
இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.