வடக்குத்து, ஜூன்.1- வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி. வீரமணி நூலகம், விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் 91ஆவது நிகழ்வாக “சுயமரியாதை இயக்கம் குடி அரசு நூற்றாண்டு விழா 28.5.2024 அன்று மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற்றது.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சி.தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒன்றிய கழக தலைவர் ந. கனகராசு வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர்
சொ.தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் சி. மணிவேல், வடலூர் நகர கழக தலைவர் புலவர் சு. இராவணன், மாநில பகுத்தறிவாளர்கழக அமைப்பாளர் இரா. பெரியார் செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல்.இரா. ராமநாதன், மாவட்ட பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் இரா. மாணிக்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரியாரிய சிந்தனையாளர் நெய்வேலி அசோக் தொடக்க உரையாற்றினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி. அருணாச்சலம் சிறப்புரையாற்றினார். நிறைவாக நூலகர் இரா. கண்ணன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் திமுக நெய்வேலி நகர அவைத் தலைவர் செல்வராஜ், பெரியாரிய கருத்தாளர் வி. திராவிடன், நெய்வேலி நகர செயலாளர் கு. இரத்தினசபாபதி, பொறியாளர் கண்ணன், பாசுகர், கோ.திராவிட மணி, தி.கோமளவல்லி,
பெ.சுமலதா,சந்திரா, மற்றும் பெரியார் பிஞ்சுகள் கண்மணி, மதிவதனி, தமிழ்மணி, அன்புமணி, எழில் வதனி, அன்புச்செல்வன், அறிவாளன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுயமரியாதை இயக்கமும், குடிஅரசு ஏடும் தமிழ் சமு தாயத்திற்கும் இந்த நாட்டிற்கும் ஆற்றிய அளப்பரிய பணிகளை சிறப்புரையாளர்கள் எடுத்து கூறினர். நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.