வெப்ப அலை
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடுமையான கோடை வெப்பம் நீடித்து வரும் நிலையில், இதுவரையில் குறைந்தது 54 பேர் வெப்பவாதத்தால் உயிரிழந்துள்ளனர். இதில், பெரும்பாலான உயிரிழப்புகள் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மற்றும் டில்லியில் நிகழ்ந்துள்ளன. இதில் நேற்று (31.5.2024) மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
தங்கம்
பிரிட்டனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 100 மெட்ரிக் டன் தங்கத்தை உள்நாட்டு பெட்டகங்களுக்கு இந்தியா கடந்த நிதியாண்டில் மாற்றியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறைகளை…
மின் நுகர்வோர் தங்கள் மின் நுகர்வு தொடர்பான குறைகளை மின்வாரியம் வெளியிட்ட புதிய கைப்பேசி எண்ணில் – 94987 94987 தொடர்பு கொண்டு தெரிவித்து எளிதில் நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
பணிக்கு…
தற்காலிக பல்நோக்கு சேவைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்கள் ஜூன் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
குற்றம்
பெண்ணின் படத்தை அவதூறாக சித்தரித்து (மார்பிங்) பரப்புவது சமூகத்துக்கு எதிரான குற்றம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
படிப்புகள்
தொலை நிலை படிப்புகளைத் தொடங்குவதற்கு விருப்பமுள்ள மருத்துவக் கல்வி நிறுவனங்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிகரிப்பு
தமிழ்நாட்டில் மூன்றாண்டுகளில் மின்சார உற்பத்திக்கான நிறுவு திறன் 4 ஆயிரத்து 76 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது என்ற தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
உத்தரவு
கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணிகளை விரைந்து மேற்கொண்டு அது குறித்து எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.