தலைமை ஆசிரியர் சுமிதா சிவக்குமார், வீரா தொழில்நுட்பக்கழக உரிமையாளர் ச.வீரமணி, ஆர் ஆர் நகர் மகேஸ்வரி சித்தார்த்தன் சி.அன்பன், பொறியாளர் ஸ்கை ஸ்டீபன், வலங்கைமான் மகாலட்சுமி கேட்டரிங் சர்வீஸ் செந்தில்குமார், புதிய பேருந்து நிலைய வர்த்தக சங்கத் தலைவர் தொழிலதிபர் ச.சங்கர் ஆகியோர் விடுதலை சந்தாக்களை மாநகர திராவிடர் கழக செயலாளர் செ.தமிழ்செல்வன், மாநகர துணைச் செயலாளர் இரா. இளவரசன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் ஆகியோரிடம் வழங்கினர் (29-05-2024).
தேனி, போடிநாயக்கனூர் கழகம் சார்பில் விடுதலை சந்தாக்களை மதுரை வே.செல்வத்திடம் தேனி மாவட்டத் தலைவர் சுருளிராஜ், மதுரை மாவட்ட செயலாளர் சுரேஷ், மதுரை சிவா, போடி நகர தலைவர் பெரியார் லெனின், பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தா காப்பாளர் ரகுநாகநாதன் ஆகியோர் வழங்கினர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகர கழகத்தின் சார்பில் மாவட்ட துணைத் தலைவர் ஸ்டார் நாகராஜ் விடுதலை சந்தாவை ஆண்டிபட்டி நகர செயலாளர் ஆண்டிச்சாமி, சுரேஷ், மாணவர் கழகத் துணைச் செயலாளர் ஜீவா ஆகியோரிடம் வழங்கினார். (29.5.2024)
லால்குடி கழக மாவட்டத்தின் சார்பில் விடுதலை சந்தா வழங்கும் கலந்துரையாடல் கூட்டம் பெரியார் திருமண மாளிகையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தே.வால்டர், மாவட்ட செயலாளர் அங்கமுத்து, உடுக்கடி அட்டலிங்கம், மற்றும் கழக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பெரியார் விளையாட்டு கழகதலைவர் ப.சுப்ரமணியம் பங்கேற்றார். மண்ணச்சநல்லூர் கழக மகளிர் பாசறை அரங்கநாயகி அம்மாள் தனது இல்ல மணவிழா அழைப்பிதழை வீர விளையாட்டு கழகதலைவர் ப.சுப்ரமணியத்திடம் வழங்கினார்.
தஞ்சை சேவியர் தொழில் பயிற்சி கல்லூரி ஆசிரியர் ஆரோக்கியராஜ், தஞ்சாவூர் திமுக தேர்தல் பொறுப்பாளர் ஸ்தனிசலால், பெரியார் நகர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வின்சென்ட் ஜோசப் ராஜ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் எஸ்.சண்முக பிரபு, தஞ்சாவூர் அரசு வழக்குரைஞர் இளஞ்செழியன், ஒரத்தநாடு பேரூர் மன்ற உறுப்பினர் க.முத்துக்குமார், தஞ்சை பி.வி. பிராய்லர்ஸ் உரிமையாளர் துரைராஜ், தஞ்சை
ஆர்.ஆர்.நகர் ஆலமரத்து மினி மீன் மார்க்கெட் உரிமையாளர், வெற்றி அய்ஏஎஸ் அகாடமி உரிமையாளர் ஆகியோர் விடுதலை சந்தா தொகைகளை தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுபட்டு அ.இராமலிங்கம், பாலா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ப.பாலகிருஷ்ணன், இரா.மோகன்தாஸ், தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் அழகு.ராமகிருஷ்ணன், அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் மா.திராவிட செல்வன் ஆகியோரிடம் வழங்கினர்.
தஞ்சாவூர் மாதாகோட்டை ஜோசப் வாட்டர் சர்வீஸ் உரிமையாளர் ஜோசப், தஞ்சாவூர் செல்வம் நகர் தலைமை ஆசிரியர் எஸ்.இந்திராணி, தஞ்சாவூர் மாதா கோட்டை மதர்தெரசா பவுண்டேஷன் தலைவர் சவரிமுத்து ஆகியோர் மாநகர துணைச் செயலாளர் இரா. இளவரசன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார், மாநில கிராம பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநகர இணை செயலாளர் இரா. வீரகுமார், இனிய பேருந்து நிலையப் பகுதி தலைவர் சாமி. கலைச்செல்வன் ஆகியோரிடம் விடுதலை சந்தாக்களை வழங்கினர். (30.5.2024)
தலைமைக் கழக மாநில அமைப்பாளர் கு.செல்வத்திடம் தேனி மாவட்ட செயலாளர்
மு மணிகண்டன் விடுதலை சந்தா வழங்கினார்.