தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் மூடப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்கள் திறக்கப்பட வேண்டும்: சென்னை நீதிமன்றம் ஆணை

2 Min Read

திருச்சி, செப். 2- தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மூடி வைக்கப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்களை உடனடி யாக திறக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு வில், ”திருச்சி, திருவெள்ளறை பெரு மாள் கோவில் உள்ள மொட்டை கோபுரத்தை ஆகம விதிகளின்படி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கோவிலில் கிழக்குப் பக்கம்தான் ராஜகோபுரம் இடம் பெறவேண்டும். ஆனால், வடக்குப் பக்கம் பார்த்து ராஜ கோபுரம் கட்டப்படுகிறது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது என்பதால், இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ”இந்த கோவில் மிகவும் பழைமையானது. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த கோவில் கட்டடங் கள் மன்னர்களின் படையெடுப்பு காரணமாக சேதப்படுத்தப்பட்டது. பஞ்சரத்ன ஆகமப்படி எந்த திசையிலும் ராஜகோபுரம் கட்டிக்கொள்ளலாம் என்று 9 ஆகம நிபுணர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், வடக்கு பக்கத்தில் ராஜகோபுரம் கட்டப்படு கிறது. இந்த ராஜகோபுரத்தை கட்ட தனி நபர் ஒருவர் ரூ.5 கோடி நன்கொடை கொடுத்துள்ளார் என்று கூறினார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் கடுமை யாக எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், எந்த ஒரு ஆதாரமும் இல் லாமல் இதுபோல பேசக்கூடாது. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. ஆகம விதியின்படி வடக்கு திசையில் ராஜகோபுரம் கட்டக்கூடாது என் றால், அது தொடர்பான ஆதாரங்களை 9 நிபுணர்கள் கொண்ட குழுவிடம் தாக் கல் செய்யுங்கள். இந்த ராஜகோபுரம் கட்டுமானப் பணிக்கு தடை இல்லை. பணியை தொடரலாம்” என்று கூறினர்.

பின்னர் நீதிபதிகள், தமிழ்நாடு முழு வதும் அனைத்து கோவில்களிலும் வடக்கு கோபுர வாசல் மூடப்பட்டுள் ளது. 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்களுக்கு தெரியாத ஆகமமா, இப்போது உள்ளவர்களுக்கு தெரியும்? என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர் நீதிபதிகள், ”1726ஆம் ஆண்டு பிறந்த அகோர சிவாச்சாரியார் எழுதிய ஆகமத்தின்படி சில கோவில் களில் வடக்கு கோபுர வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதனால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் மூடப் பட்டிருக்கும் வடக்கு கோபுர வாசல் களை உடனடி யாக திறக்க வேண்டும்” என்று உத்தர விட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *