தேர்தல் முடிவுக்கு பின் வாக்கு எண்ணிக்கை விவரம் : தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தகவல்

1 Min Read

சென்னை, மே 30-தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி தனித்தனியாக காமிராக்களால் காட்சிப் பதிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

இதுவரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இறுதிக் கட்டமாக 7ஆவது கட்ட வாக்குப் பதிவு வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்கிடையே, ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, “தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பதி வான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், 39 மய்யங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். வாக்காளர்கள் எண்ணிக்கை, பதிவான வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில், தேவைப்படும் இடங்களில், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று கூடுதல் மேஜைகள் அமைக்கப்படும்.

ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி தனித்தனியாக காமிராக்களால் காட்சிப் பதிவு செய்யப்படும். இதுதவிர, சுற்றியுள்ள நிகழ்வுகளும் காட்சிப் பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணும் பணியில் 10,000 அலுவலர்கள், அவர்களுக்கு உதவியாக மின்னணு இயந்திரங்கள் எடுத்து வருதல் உள்ளிட்ட பணிகளுக்காக 24 ஆயிரம் பேர், நுண்பார்வையாளர்கள் 4,500 பேர் என மொத்தம் 38,500-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் அஞ்சல் வாக்கு கள் எண்ணப்படும். தொடர்ந்து, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை 8.30 மணிக்கு தொடங்கும். மின்னணு வாக்குகள் எண்ணப்படும்போதே, அஞ்சல் வாக்கு எண்ணிக்கையும் தொடர்ந்து நடைபெறும்.

அதே நேரம், அஞ்சல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே, இறுதி சுற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *