புதுடில்லி, செப்.2 – மோடி அரசின் கொள் கைகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. வேலையின்மை உச்சத்தை தொட்டுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மோடி அரசு தொடுத்துள்ள இந்த இரண்டு கொடிய தாக்குதல்களை யும் எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செப்டம்பர் 1 முதல் ஏழு வரை நாடு முழுவதும் மாபெரும் பிரச்சார இயக்கத்தை யும், செப்டம்பர் 7 அன்று மாபெரும் மறியல் போரையும் நடத்த உள்ளது. 30 வயதிற்குக் கீழுள்ள கிட் டத்தட்ட 53 சதவீதம் பேர் வேலையின்றி உள்ளனர்.
தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப் பின் புள்ளி விவரங்களின் படி 2023 ஜனவரி -மார்ச் காலத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 15 வயதிற்கும் மேற்பட்ட தனிநபர்களி டையே வேலையின்மை விகிதம் 6.8 சதவீத மாக இருந்தது. இதுகுறித்த உண்மையான சித்திரம் வெளி வருவதை அரசு விரும்பாத நிலை யில் இதுவும் கூட குறைந்த மதிப் பீடு தான் என்பது வெளிப்படை.
இந்தியப் பொருளாதார கண் காணிப்பு மய்யத்தின் ஜூலை மாதத்திற்கான தரவு களின்படி இந்தியாவில் ஒட்டுமொத்த வேலை யின்மை என்பது 7.95 சதவீதமாக உள்ளது. 2014ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது வேலையின்மை விகிதம் 5.44 சதவீதமாக இருந்தது என்ப தும் கவனிக்கத்தக்கது.
ஒவ்வோர் ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கு வோம் என்றும், வேலையின்மையை முற்றிலுமாக ஒழித்துக் கட்டி விடுவோம் என்றும் உறுதியளித்து பாஜக ஆட்சிக்கு வந்தது. எனினும் இந்திய பொருளாதார கண் காணிப்பு மய்யத்தின் தரவுகள் சுட் டிக் காட்டுவதைப் போல, வேலையின்மை விகிதம் குறைவதற்குப் பதிலாக, 2014ஆம் ஆண்டினை ஒப்பிடு கையில், 2.5 சதவீதத்திற்கும் மேலாக அதி கரித்துள்ளது.
குறிப்பிட்ட கால இடைவெளி யில் மேற் கொள்ளப்படும் தொழி லாளர் சக்தி குறித்த கணக்கெடுப் பின்படி 2023 ஜனவரி – மார்ச் காலப்பகுதியில் நகர்ப்புறங்களில் உள்ள 15 முதல் 29 வயது உள்ளவர் களிடையே நிலவும் வேலையின்மை என்பது 17.3 சதவீதம் ஆகும். இவர்களில் ஆண்களி டையே நிலவும் வேலையின்மை என்பது 15.6 சதவீதம் எனில், பெண் களிடையே அது 22.9 சதவீதமாக உள்ளது.
அரசாங்கப் புள்ளி விவரங் களின்படியே, கரோனா பெருந் தொற்று தொடங்கு வதற்கு முன்பு, நகர்ப்புற தொழிலாளர்க ளிடையே முழுநேர வேலைவாய்ப்பின் பங்கு 50.5 சதவீதமாக குறைந்திருந்தது. இது 2022 டிசம்பரில் 48.9 சதவீத மாக மேலும் குறைந்துள்ளது. இதன்படி நகர்ப்புறங்களில் வேலை செய்யத் தகுதி படைத்த 15 கோடி பேரில் 7.3 கோடி பேருக்கு மட்டுமே முழுநேர வேலை வாய்ப்பு உள்ளது.
நாடாளுமன்றத்தில் எழுப்பப் பட்ட கேள்விக்கு கடந்த பிப்ர வரியில் அரசாங்கம் அளித்த பதிலின்படி 2022-_2023 நிதியாண் டில் மட்டுமே 10,000க்கும் மேற் பட்ட குறு, சிறு, நடுத்தர தொழி லகங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக பல லட்சக் கணக்கானோர் வேலை இழந் துள்ளனர்.