கடவுள் சக்தியா? சி.சி.டிவி.யின் சக்தியா?

2 Min Read

கோயில் உண்டியலே ‘கோவிந்தா!’

திருப்பதி, மே 30 சிசிடிவி காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. யார் இந்த நபர் என்று காவல்துறையினரும் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.. இங்குள்ள சஞ்சய் நகர் பகுதியில் அம்மன் கோயில் ஒன்று உள்ளது.. இந்த கோயில் சுற்றுவட்டார பகுதிகளிலேயே மிகவும் பிரபலமானது. அதனால் எந்நேரமும் இங்கு பக்தர்கள் வந்துபோவது அதிகமாகவே இருக்கும்.. இந்நிலையில், கடந்த 20ஆம் தேதியும் அப்படித்தான் பொதுமக்கள் பலர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு போனார்கள்.
அப்போது இளைஞர் ஒருவர் வந்தார். பார்ப்பதற்கு டிப்டாப்பாய் ஆடையணிந்தவாறு கோயிலுக்குள் வந்தார்.. வரும்போதே, கோயில் வாசலில் செருப்பை கழட்டி ஒரு ஓரமாக வைத்துவிட்டு, உள்ளே நுழைந்தார்.. ஒவ்வொரு சாமி சிலைகளை பார்த்ததுமே, நொடியில் உணர்ச்சிவசப்பட்டு, பக்தி பரவசத்துடன் தரிசித்து கொண்டே வந்தார்.. பிறகு அம்மனை தரிசனம் செய்தவாறே நின்று கொண்டிருந்தார்.

கோயிலுக்குள் இருந்தவர்கள் எல்லாம், சாமி கும்பிட்டுவிட்டு ஒவ்வொருவராக வெளியேறி சென்றனர்.. இந்த இளைஞர் அங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்தார்.. பிறகு மெல்ல எழுந்து வெளியேயும், உள்ளேயும் நோட்டமிட்டார்.. ஒருத்தரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டதுமே, வேகமாக சென்று, அங்கிருந்த காணிக்கை உண்டியலை கழற்றி அலேக்காக தூக்கி கொண்டார். கையோடு ஒரு பெரிய கோணிப்பையை கொண்டுவந்திருந்தார்.. அதற்குள் உண்டிலை திணித்து மறைத்து, தோள் மீது வைத்துக்கொண்டு கூலாக கோயிலை விட்டு வெளியேறினார்..

இந்த காட்சிகள் அத்தனையும் கோயிலிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதற்கு பிறகுதான் கோயில் உண்டியலை காணாமல் கேமராவை ஆராய்ந்தபோது இந்த காட்சி பதிவாகியிருந்தது. பிறகு, கோயில் நிர்வாகத்தினர் இதுகுறித்து காவல்துறைக்குப் புகார் தந்ததையடுத்து, காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை துவங்கியிருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்திலும் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. ஆனால், இந்த இளைஞர் உண்டியலையே பார்சல் செய்து கொண்டுபோனதுதான் வியப்பை தந்து வருகிறது.. வாசலில் செருப்பை கழட்டிவிட்டு, பயபக்தியுடன் அம்மனை கும்பிட்டுக் கொண்டே கோயிலுக்குள் என்ட்ரி தந்து “நிகழ்வு” நடத்தியதுதான் அதற்குமேல் வியப்பை தந்து வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *