ராகுல் காந்தி விமர்சனம்
லூதியானா, மே 30- பிரதமர் மோடி வெறுப்பு அரசியலில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட் டியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வருகிற ஒன்றாம் தேதி நடைபெறும் 7 ஆவது கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தலை வர்கள் மும்முரமாக ஈடு பட்டுள்ளனர்.
அந்தவகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று (29.5.2024) பஞ்சாப் மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட் டார். லூதியானாவில் நடந்த மிகப்பெரிய பொதுக்கூட்டத் தில் பேசிய அவர், பிரதமர் மோடி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கி னார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வெறுப்பு அரசியல்
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகாலதனது ஆட்சியில் மதம், மொழி, பிராந்தியத்தின் அடிப்படையில் நாட்டு மக்களை தங்களுக்குள்ளே மோத விட்டதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. இத்தகைய வெறுப்பு அரசியலில் மட்டுமே அவர் ஆர்வம் காட்டுகிறார்.
நாட்டின் பிரதமராக இருந்தபோதிலும் மோடி வெறும் 22 பெரும் தொழிலதிபர்களுக்காக மட்டுமே உழைக்கிறார். தனது பெரும் பணக்கார நண்பர்களின் ரூ.6 லட்சம் கோடி அளவிலான கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறார். அதேநேரம், ஏழை விவசாயிகள் கடனில் சிக்கி மாளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசமைப்புச் சட்டம்
நாட்டின் அரசமைப்புச் சட்டம், காந்தியார், நேரு, அம்பேத்கர் உள்ளிட்ட ஏராளமான மிகப்பெரிய தலைவர்களால் வடிவ மைக்கப்பட்டது. இந்த அரசியல் சாசானத்தை மாற்றுவதற்கு காங்கிரஸ் ஒருபோதும் அனு மதிக்காது.
இது வெறும் புத்தகம் அல்ல, மாறாக நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் குரல். இது அவர்களுக்கான உரிமை களை வழங்கி வருகிறது.
எனவே, இந்த அரச மைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காக பஞ்சாப் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்.
இந்தியா கூட்டணியின் முதல் பணி
ஜூன் 4 ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அகற்றப்பட்டு, இந்தியா கூட்டணி அரசு ஆட்சி அமைக்கும். உடனடியாக அக்னிவீர் திட்டத்தை குப்பைத்தொட்டியில் போடுவதே அரசின் முதல் பணியாக இருக்கும்.
அக்னிவீர் திட்டம் பாதுகாப்பு படையினரை அவமதிக்கும் திட்டம் ஆகும். ஏழைகளுக்கு எந்தப் பயனும் இல்லாத, செல்வந்தர்களுக்கு அனைத்து பலன்களையும் வழங்கக்கூடிய 2 வகை யான திட்டங்கள் நாட்டில் இருக்க முடியாது.
இந்தியா கூட்டணி ஆட்சியில் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஜூலை 5ஆம் தேதி முதல் ஏழைப் பெண்களின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் ரூ.8,500 நேரடியாக செலுத்தப்படும்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்
லட்சம் அரசு பணி யிடங்கள் நிரப்புதல், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் ஆஷா, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதி யத்தை இரட்டிப்பாக்குதல் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி யின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
-இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.