29.5.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் : தமிழ்நாடு அரசு பெருமிதம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 2024 தேர்தல், இரண்டு நோக்கங்களுக்கு இடையே நடக்கும் போராட்டம் கொண்டது. ஒன்று சந்திரனில் மனிதன் செல்வது குறித்தும், இன்னொன்று ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கான வாய்ப்பை பெற முனைவதற்கும் நடக்கும் போட்டி என்கிறார் கட்டுரையாளர் சிகா முகர்ஜி.
* ஜூன் 2ஆம் தேதி நடைபெறும் தெலங்கானா தொடக்க நாள் விழாவில் சோனியா கலந்து கொள்ள முதலமைச்சர் ரேவந்த் நேரில் அழைப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அமிர்தசரசில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கார்கே, “ஷா சாஹாப் கவலைப்படுகிறார்… ஜூன் 4க்குப் பிறகு கார்கே வேலை இழப்பார் என்று அவர் கூறியதாக செய்தித்தாள்களில் படித்தேன். நான் நவுக்ரி (வேலை) செய்ய அரசியலுக்கு வரவில்லை. நான் சேவா (சமூகப் பணி) செய்ய வந்திருக்கிறேன். ஜூன் 4க்குப் பிறகு, மோடி-ஷாவுக்கு பதிலாக இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரப் போகிறது என நம்பிக்கை மக்களிடம் மலர்ந்துள்ளது” என்கிறார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆறாவது கட்டத்தில் பதிவான வாக்குகளின் முழுமையான எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இறுதி வாக்குப்பதிவு 63.37%
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment