‘அக்னி நட்சத்திரம், அக்னி நட்சத்திரம்’ என்று சில ஏடுகள் செய்தி வெளியிடுகின்றனவே; ‘அக்னி நட்சத்திரம்’ ஒன்று அறிவியல்படி இருக்கிறதா?
கோடான கோடி நட்சத்திரங்களில் ‘அக்னி நட்சத்திரம்’ கண்டுபிடித்தவர் யார்?
எந்த விஞ்ஞானம் அப்படி கூறுகிறது?
”பத்திரிக்கையை அடிப்பது விஞ்ஞான கருவிகளால், பரப்புவதோ அஞ்ஞானத்தை’’ வெட்கக்கேடு!
இது என்ன நியாயம்?
விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி மூன்று நாள் ‘தவம்’ இருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடையாம்!
ஒரு மனிதருக்காக மக்கள் தடை செய்யப்படு வது எந்த வகையில் நியாயம்?
நடப்பது அதிபர் ஆட்சியா, ஜனநாயக ஆட்சியா?
எப்படி தாங்குகிறார்கள்?
டில்லியில் நேற்று (28.5.2024) 122 டிகிரி வெப்பமாம்!