சென்னை, மே 28- தமிழ்நாடு முழுவதும் நேற்று (27.5.2024) 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னை யில் 105.08 டிகிரி வெயில் கொளுத்தியது.
ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது இதனையடுத்து தமிழ்நாட்டில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட் டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது. இந்நிலை யில் வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் நேற்று (27.5.2024) வங்கதேசம் அருகே கரையை கடந்தது. இதனால் மீண்டும் தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இனிவரும் நாட்க ளில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.