சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு : பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக 14 நாட்களில் 89 பேர் குண்டர் சட்டத்தில் சிறை

2 Min Read

சென்னை, மே 28- சென்னையில் கடந்த 5 மாதங்களில் 585 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் டுள்ளதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகரில் குற்றவாளி களின் தொடர்ச்சியான குற்ற நடவடிக் கைகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடு வோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

நடப்பாண்டில் ஜன. 1ஆம் தேதி முதல் மே. 26ஆம் தேதி வரையில் சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமை திக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 286 பேர், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட106 பேர், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 140 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

மேலும், குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 23 பேர், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 7 பேர், பாலியல் தொழில் நடத்திய 12 பேர், பெண்களை மானபங்கப்படுத்திய 4 பேர் மற்றும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் 3 பேர் என மொத்தம் 585 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கடந்த மே.13 முதல் 26ம் தேதி வரையிலான 14 நாட்களில் 2 பெண்கள் உட்பட 89 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர் களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *