“இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்டத்தை மாற்றி விடுவார்கள்’’ என்று உ.பி.யில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மதப் பிரச்சினையை முன்னிறுத்துவதே மோடியின் வழமையான பிரச்சார மாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்குப் புகார்கள் கொடுத்தும் தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் இருந்து தான் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு வருகிறதே தவிர, மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவதில்லை. குஜராத்தில்கூட இதே நடைமுறைதான். அப்படி இருக்கும்பொழுது மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பதாகப் பிரதமர் பேசுவது எந்த அடிப்படையில்? மதவாதத்தை முன் நிறுத்தி தேர்தலில் வெற்றி பெறலாம் என்கின்ற குறுகிய மனப்பான்மை தானே!
மதப் பிரச்சினையை கிளப்பும் பிரதமர் மோடி!
Leave a Comment