புதுடில்லி, மே 27 2.03 கோடி ஹெக்டேர் (சுமார் 5 கோடி ஏக்கர்) காணாமல் போனது குறித்து அறிக்கை தாக் கல் செய்ய வேண்டுமென பசுமைத் தீர்ப்பாயம் ஒன்றிய அரசிற்கு உத்தர விட்டுள்ளது. காட்டை அழிப்பதில் உலகிலேயே இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்ற நிலையில் கடந்த இருபது ஆண்டு களில் 2.03 கோடி ஹெக்டேர் மரங்கள் அழிக் கப்பட்டது அல்லது காணா மல் போனது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒன்றிய அரசிற்கு தாக் கீது அனுப்பியுள்ளது. காடுகளை அழிப்பது வனப் பாது காப்புச் சட்டம், 1980, காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 ஆகியவற்றை மீறும் செயல் எனவும் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித் துள்ளது.
நீதிபதி பிரகாஷ் சிறீ வஸ்தவா, நீதிபதி அருண் குமார் தியாகி மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் டாக்டர் ஏ.செந்தில்வேல் தலைமையிலான அமர்வு காடுகள் மாயமானது குறித்து தாமாக முன் வந்து விசாரித்தனர். தொடர்ந்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், ஒன் றிய மாசுக் கட்டுப்பாட்டு அமைச்சகத்திற்கு நோட் டீஸ் அனுப்பி யுள்ளனர். 2000-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில் வடகிழக்கு பகுதிகளைப் பற்றிய குறிப்பிட்ட குறிப் புடன், இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பின் நிலையை விவரிக்கும் அறிக்கையை அடுத்த விசாரணை தேதிக்கு குறைந்தது ஒரு வாரத் திற்கு முன் தாக்கல் செய்ய வேண்டும் சர்வே ஆஃப் இந்தியா தலைவ ருக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட் டுள்ளது. 2024-ஆம் ஆண் டின் குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் அறிக்கையின்படி, இந்தியா 2000- ஆம் ஆண்டிலிருந்து 2.03 கோடி ஹெக்டேர் மரங் களை இழந்துள்ளது, 2002-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை 4,14,000 ஹெக்டேர் ஈரப்பத முதன்மைக் காடுகளை இழந்துள்ளது என்று தரவு ஒன்று தெரிவிக்கிறது. இது மொத்த மரங்களின் இழப்பில் 18 சதவீதம் ஆகும். 2001 மற்றும் 2023-ஆண்டுகளுக்கு இடையில் ஐந்து மாநி லங்கள் 60 சதவீத மரங் களை இழந்துள்ளன. இதில் அசாம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மிசோரம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் மாநி லங்கள் உள்ளன.