தொடரும்…
வங்கக் கடலில் நிலவிய ரீமல் தீவிர புயல் வங்கதேசம் நோக்கி சென்றுவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இன்று முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம்தகவல்.
நிறைவு
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் தற்போது வரை 20 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ பாதை அமைக்கும் பணி நிறைவடைந் துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்.
விண்ணப்பிக்க…
அம்பத்தூர், வடகரை, கும்மிடிப் பூண்டி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் (அய்.டி.அய்.) பயிற்சி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறைபாடு தீர்க்க
மின் அழுத்த குறைபாடு பிரச் சினையை சமாளிக்க துணை மின் நிலையங்களில் கெபாசிட்டர் (மின் தேக்கி) கருவி பொருத்துவது உள் ளிட்ட நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தகவல்.
வெப்ப நிலை
தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாள் களுக்கு வெப்ப நிலை படிப்படியாக உயரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரி வித்துள்ளது.
எச்சரிக்கை….
ஒன்றிய அரசில் பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆள்களை அனுப்பும் முகவர்கள், முகமைகள்மீது காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.